Home தமிழகம் நியாய விலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்படுமா?அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

நியாய விலைக் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்படுமா?அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

9
0
SHARE

சென்னை, ஜன. 13&

ரேஷன் கடைகளில் உளுத்தம்பருப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சைதாப்பேட்டை தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை தொகுதியில் 172 வார்டு, பள்ளிப்பட்டு மற்றும் கானகம் ஆகிய பகுதிகளில் புதிய ரேஷன் கடைகளை அமைக்க வேண்டும் என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தேவையாக இடம் இருந்தால் கடை உடனடியாக அமைக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய சுப்பிரமணியன், மாநகராட்சியின் இடம் உள்ளது என்றார். இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுவாக ரேஷன் கடைகள் அமைப்பதற்கு சென்னை போன்ற நகரங்களில் இடம் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

தனியார் கட்டிடங்களில் இடம் தர மறுக்கிறார்கள். உறுப்பினர் இடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். உடனடியாக அப்பகுதியில் ரேஷன் கடை அமைக்கப்படும் என்றார். தொடந்து பேசிய சுப்பிரமணியன் ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு கிடைக்கவில்லை. எனவே உளுத்தம் பருப்பை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. தி.மு.. ஆட்சி காலத்தில் 1 கோடியே 52 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போது 1 கோடியே 95 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை அப்போது வெளி மார்க்கெட்டில் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு மானியமும் இப்போது நிறுத்தி விட்டனர். துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மானியத்தை ஈடுகட்ட அரசுக்கு மாதத்திற்கு ரூ.207 கோடி செலவாகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here