Home சிறப்புச் செய்திகள் நிறுவன வளர்ச்சியில்தொழிலாளர்களின் பங்கு

நிறுவன வளர்ச்சியில்தொழிலாளர்களின் பங்கு

11
0
SHARE

நிர்வாக&தொழிலக&ஸ்தாபன வளர்ச்சியில் பணியாளர்களின் பங்கு முதலிடத்தில் உள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். பணியாளர்களே தரத்தின் தளமாவார்கள். பணியாளர்களே ஊக்குவித்து அவர்கள் பணியை செம்மையாகச் செய்தால் தான் நிர்வாகம் வளர்ச்சிகாணும்.இந்த உண்மை சம நிர்வாகத்திற்கும் பொருந்தும். செம்மை நிர்வாகத்திற்கு பொருந்தும். வெளியிலிருந்து பர்த்தால் பணியாளர்களை ஊக்குவித்து&உந்துதல் அளித்து&நிர்வாக வளர்ச்சியைக் கூட்டுவதில் சம&செம்மை நிவாகங்களிடையே எந்த வித்தியாசமும் தெரியாது.

ஆனால் அடிப்படியான அணுகுமுறையை ஆராய்ந்தால் பணியாளர்களைக் கையாளும் முறையில் சம&செம்மை நிர்வாகங்களிடையேமலைக்கும் மடுவுக்கும்உள்ள வித்தியாசம் நன்கு தெரியும். இந்த வித்தியாசத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து அறிதல் மிக மிக அவசியம்.

இந்தக் கையாளும் முறைதான் செம்மை நிர்வாகத்தின்வளர்ச்சித் தூண்களில்ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளவேண்ணும். சம நிர்வாகம் பணியாளர்களை ஊக்குவிக்கிறது. அதனால் தான் சம வெற்றியை அடைய முடிகிறது. ஆனால் அது தொடர்ந்து பணியாளர்களை சிறப்பாக பணியாற்ற உந்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலையிலுள்ளது. அந்த உந்து சக்த் குறைந்தாலோ அல்லது மறைந்தாலோ&சிறப்பாக பணிகள் நிறை பெறாது. எங்கும், எப்பொழுதும், எதற்கும் தொடர்ந்து பணியாளர்களை உந்திக் கொண்டேயிருக்க வேண்டிய பரிதாப நிலையிலுள்ளது சம நிர்வாகம் தொழிலகம்&ஸ்தாபனம்.

ஆனால் செம்மை நிர்வாகமோ மிகவும் மாறுபாடான வழிமுறையைக்&கையாளுகிறது. ஆரம்ப கட்டத்தில் பணியாளர்களை ஊக்குவிக்கிறது.

அவர்கள் திறமைசாலிகளாகத் தேவையான வழிமுறைகளை சிந்தித்து வகுத்து செயலாற்றுகிறது. அவர்களிடம் திறமையை உண்டு பண்ணுகிறது. பணியாளர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அவர்களைத் தன்னார்வத்துடன் பணியாற்றத் தூண்டுகிறது. இதனால் திறமை கூடுகிறது. தன்னம்பிக்கை வளர்கிறது. தன்னார்வம் மிளிர்கிறது. பணியாளர்களிடையேதானே நிர்வாகிஎன்ற உறுதியான எண்ணம் வளர்கிறது. நிர்வாக வளர்ச்சிக்கு தன்னார்வத்துடன் தானாக செயலாற்றும் மனப்பக்குவம் ஏற்படுகிறது.

அவர்கள் ஆற்றவேண்டிய பணி என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் செம்மை நிர்வாகத்தில்&தொழிலகத்தில்&ஸ்தாபனத்தில் தொடர்ந்து உந்தி உந்தி செயல்படுத்துதல் அவசியமற்றதாக ஆகிறது.

செம்மை நிவாகிக ள் ஆரம்ப கட்ட முயற்சிகளை இருவகைப்படுத்தி செயலாற்றுகிறார்கள். 1.ஒத்துழைப்பு தர உதவும் அனைத்து உறுப்பினர்களும் உளமாற பங்கேற்கிறார்கள். 2.அவர்கள் கடமை உணர்வு நிறைந்தவர்களாகவும், கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக உழைப்பவர்களாகவும்தானாகவே அமைந்துள்ளார்கள்எனபதை அறிகிறோம். இந்த இரண்டு வகைகளையும் இணைத்து ஒரு முக்கோணமாக வரைந்தால் மிகவும் சிறப்பாக ஆற்றிடும்பணி அடித்தளமாகஅமைகிறது.  இந்தக் கூட்டுழைப்பினால் நிர்வாகமும் கொடிகட்டிப் பறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here