Home விளையாட்டு 300&வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் தோனி

300&வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் தோனி

16
0
SHARE

கொழும்பு, ஆக. 31&

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி, அதிரடி காட்டி ரன் குவிப்பில் ஈடுபட்டு, கேப்டன் பதவியை தனதாக்கியவர் மகேந்திர சிங் தோனி. இவரின் பொறுமை மற்றும் மைதானத்தில் சக வீரர்களுடன் பழகும் இயல்பு இவருக்கு கூல் கேப்டன் என்ற பெயரை பெற்று தந்தது.

தமிழ்நாட்டு ரசிகர்கள் இவரை தல என்று கொண்டாடு கிறார்கள். இந்த நிலையில் இந்தியா, இலங்கை இடையே இன்று (வியாழக்கிழமை) நடக்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தோனிக்கு 300வது ஒருநாள் போட்டியாகும்இந்திய அணியில் இதற்கு முன்னர் சச்சின் தெண்டுல்கர், 463 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகத் திகழ்கிறார்.

ராகுல் டிராவிட், 344, முகமது அசாருதீன், 334, சவுரவ் கங்குலி, 311, யுவராஜ் சிங், 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இலங்கை மண்ணில் தோனியின் நடக்கவிருக்கும் தோனியின் 300வது ஒருநாள் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here