Home சினிமா சன்னிலியோன்படத்தில் பாகுபலி டீம்

சன்னிலியோன்படத்தில் பாகுபலி டீம்

11
0
SHARE

வி.சி.வடைவுடையான் இயக்கயிருக்கும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் ஹீரோயினாக நடித்திருப்பது தெரிந்த செய்தி. அவருடைய கோடம்பாக்க வருகை பல நடிகைகளுக்கு திகில் கிளப்பி இருக்கிறதாம். எப்படியும் படத்தின் ரிலீஸ் அன்று சன்னி லியோனுக்கு பெரிய கூட்டம் வரப்போகிறது. அதோடு சில்க் போல சன்னியும் ஒரு பெரிய ரவுண்ட் வரப்பொகிறார் என்று இப்போதே  கோடம்பாக்கம் முழுதும் பேச்சு எழுதிருக்கிறது.

இந்நிலையில் பிரம்மாண்டமாக தயாராகவிருக்கும் இந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை 2.0 மற்றும் பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்த தொழிநுட்பக் குழுவினரிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

இத்திரைப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் நவ்தீப் நடிக்கவிருப்பதாகவும்,  தற்போது, தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான அளவில் தனது உடலமைப்பை கச்சிதமாக மாற்றும்  வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இந்த படம் வரலாற்று படம் என்பதால் வீரமாதேவி என்று  பெயர் வைத்துள்ளார்கள்.

இப்படத்திற்காக இவருக்கு நம்பர் 1 நடிகை நயன்தாராவிற்கு சமமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், சன்னி லியோன் தமிழில் வெற்றி பெற்றுவிட்டால், நம் மார்க்கெட் என்ன ஆவது என பல முன்னணி நடிகைகள் புலம்பி வருகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here