Home சினிமா ரகுமானுக்கு கிடைத்த புதிய பதவி

ரகுமானுக்கு கிடைத்த புதிய பதவி

22
0
SHARE

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு  சிக்கிம் அரசு கவுரவ அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. இசைத்துறையில் சாதனை புரிந்த ரகுமான்  பல்வேறு விருதுகளும் ஆஸ்கர் விருதுகளும் வாங்கினாலும் அவருக்கு இந்திய அரசும் தமிழக அரசும் கௌரவிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. ஆனால் தமிழக அரசு  ரகுமானை கண்டுகொள்ளவேயில்லை

இந்நிலையில் சிக்கிம் அரசு தனது மாநிலத்தின் விளம்பரத்தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமித்துள்ளது. இதற்கான விழாவில் சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதை ஏற்றுக்கொண்டு ரகுமான் பேசும்போது, “சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது.

எனக்கு முக்கியத்துவம் தந்து என்னை கவுரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை சிறப்புடன் செய்வேன்என்றார்.