Home சினிமா பார்த்திபனின் தேடுதல் வேட்டை

பார்த்திபனின் தேடுதல் வேட்டை

11
0
SHARE

நடிகர் பார்த்திபன் தனது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்திற்கு பிறகு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முயற்சியில் இருக்கிறார். இந்த படம் தனது உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்காக உள்ளே வெளியே 2ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணைய தளம் மூலம் தேடி வருகிறார்.

தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், ‘2018ல் துவங்கும் உள்ளே வெளியே கமர்ஷியல் காமெடி படத்திற்கு, 18 வயதில் அமைதியான வசீகரமான பெண்ணும், 28 வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு போன்ற பெண்ணும், 38 வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவைஎன தேடுதல் வேட்டை தொடங்கி இருக்கிறார். ‘உள்ளே வெளியேபடத்தின் முதல் பாகத்தை கடந்த 1993ம் ஆண்டு பார்த்திபன் இயக்கினார்.

அதில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here