Home சினிமா முடிவுக்குவந்தது சாமி 2 பஞ்சாயத்து

முடிவுக்குவந்தது சாமி 2 பஞ்சாயத்து

20
0
SHARE

சாமி 2 படத்தை ஹரி இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் விவேக் காமெடி பெரிய ஹிட். ஆனால் இந்த படத்தில் விவேக்கிற்கு பதிலாக சூரியை நடிக்க வைத்திருக்கிறார்கள்.  முதல் பாகத்தில் த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஆனால் த்ரிஷாவும் இருக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஷ¨ட்டிங் தொடங்கி  நடந்து கொண்டிருந்த நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை த்ரிஷா நான் இனி நடிக்க மாட்டேன் என்று கிளம்பி வந்து விட்டார். படத்தில் த்ரிஷாவை விட்டுவிட்டு கீர்த்தி சுரேஷிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் அவர் கிளம்பி விட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் கீர்த்தியிடம் இது குறித்து கேட்டபோது அப்படியெல்லாம் இல்லை என்று கூறினார்.

இப்போது  படத்தின் தயாரிப்பாளர் தமீன்ஸ் த்ரிஷா நடிக்க வில்லையென்றால் பெரிய தொகை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாகவும் இதனால் த்ரிஷா தரப்பு கோபமடைந்ததாகவும் கூறப்பட்டது. இப்போது தயாரிப்பாளர் தமீன்ஸ் நான் அப்படி பதிவிடவில்லை என கூறிவிட்டார். இதனால் இந்த சர்ச்சை அடங்கிவிட்டது.