Home சுடச்சுட பினாமிபரிவர்த்தனையில்ஈடுபட்டால் 7 ஆண்டு ஜெயில்வருமான வரித்துறை எச்சரிக்கை

பினாமிபரிவர்த்தனையில்ஈடுபட்டால் 7 ஆண்டு ஜெயில்வருமான வரித்துறை எச்சரிக்கை

9
0
SHARE
"Income Tax Department,BKC ,Bandra, Mumbai." *** Local Caption *** "Income Tax Department,BKC ,Bandra, Mumbai. Express photo by Vasant Prabhu. 11�82012."

புதுடெல்லி, ஜன. 12&

பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் 8துறை எச்சரித்து உள்ளது.

பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் மீது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளதாக வரித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய நாளிதழ்களில் வருமான வரித்துறை அறிவிப்பு விளம்பரமாக வெளியிடப்பட்டு உள்ளது.

பினாமி பரிவர்த்தனையிலிருந்து ஒதுங்கியிருங்கள் என்ற தலைப்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. சிறந்த குடிமகனாக விளங்குவோர் அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பினாமிகள், அதனால் ஆதாயமடைவோர் மற்றும் தங்களது பெயரைக் குறிப்பிட விரும்பாமல் பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் என அனைவருமே தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவர்கள்தான்.

இவ்வித நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் மேற்கொண்ட சொத்து மதிப்பில் 25 சதவீதம் அபராதமாகவும், 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் ரூ.1,833 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை முடக்கியுள்ளனர். மொத்தம் 517 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. 541 சொத்துகள் அரசு வசம் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது 2016ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியிலிருந்து அக்டோபர் 2017 வரையான காலத் தில் மேற்கொள்ளப்பட்டவை. பினாமி பரிவர்த்தனை (தடை) சட்டம் 2016ன் கீழ் 2016ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதியிலிருந்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளிப்பவர்கள்மீது 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும், சொத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளதாக வரித்துறை அறிவிப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here