Home விளையாட்டு வெளிநாட்டு மண்ணில் தவான், ரோகித் சொதப்பல்: இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்சவுரவ்...

வெளிநாட்டு மண்ணில் தவான், ரோகித் சொதப்பல்: இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்சவுரவ் கங்குலி பேட்டி

13
0
SHARE

புதுடெல்லி, ஜன.12&

வெளிநாட்டு மைதானங்களில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் திணறி வருகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார். மேலும் செஞ்ஞரியனில் நடக்கவிருக்கும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில மாத இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:&

வெளிநாட்டு மைதானங்களில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆட்டம் சரியில்லை. உள்நாட்டில் இவர்களின் சாதனைக்கும், வெளிநாட்டில் இவர்களின் ரன்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது.

இது வெண்ணைக்கும், சுண்ணாம்புக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். ஆதலால் விராட் கோலி, முரளி விஜய்யை நம்பியுள்ளது. புஜாராவை எடுத்துக் கொள்ளுங்கள் அவரது 14 சதங்களில் 13 சதங்கள் துணைக்கண்டங்களில் எடுக்கப்பட்டது.

நான் ஏன் ராகுலை அடிக்கடி குறிப்பிடுகிறேன் என்றால் அவர் ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்துள்ளார், மேற்கிந்திய தீவுகள், இலங்கையிலும் ரன்கள் எடுத்துள்ளார். தோல்வி எனக்கு அதிர்ச்சியாக இல்லை.

இதற்காக நாம் பதற்றமடைய வேண்டிய தேவை இல்லை. அடுத்த போட்டியில் விராட் கோலி பழைய நிலைக்கு திரும்புவார். ராகுல்அல்லதுரகானேஅணிக்குதிரும்புவார்கள்என்று

நினைக்கிறேன்.

கேப்டவுனை காட்டிலும் செஞ்ஞரியனில் பந்து அதிக பவுன்ஸ் ஆகும். தற்போதுள்ள நிலையில் எனது பரிந்துரை என்றால், தவானுக்கு பதிலாக ராகுலை களம் இறக்குவேன். அத்துடன் 5 பவுலர்களையும் களம் இறக்குவேன்.

ரோகித் சர்மாவுக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். தோல்வி பெரிதல்ல. தோல்வி வந்தவுடன் விமர்சனங்களும் வரும். இதுகுறித்த கவலை வேண்டாம். அடுத்த போட்டியில் நாம் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here