Home சிறப்புச் செய்திகள் தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார்…!

தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார்…!

21
0
SHARE

தமிழக சட்டமன்றத்தின் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேரவையில் செயல்பாடுகள் நன்றாக இல்லை. வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு என்ற கோணத்தில்தான் போகிறது.

  டில்லி செங்கோட்டை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி குஜராத்தில் கைது செய்யப்பட்டான். கடந்த 2000&ம் ஆண்டு டிசம்பர் 22&ம் தேதி டெல்லி செங்கோட்டை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாயினர். தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தியதில் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சதி என தெரியவந்தது. இந்நிலையில் டெல்லி சிறப்பு போலீஸ்படையினர், குஜராத் பயங்கரவாத எதிர்ப்புபடையினர் கூட்டாக இணைந்து நடத்திய வேட்டையில் டெல்லி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதி ஒருவரை கைது செய்தனர்.

அவனதுபெயர்பிலால்அகமதுஎன்பதும்செங்கோட்டைதாக்குதலில்தொடர்புடையவன்என்பதும்தெரியவந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், கடந்த 17 ஆண்டுகளாக பிலால் அகமது குஜராத்தில் மறைந்து இருந்தது தெரியவந்தது

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், தி.மு.., கூட்டணி வேண்டாம் என, பலர் ஆவேசமாக பேசினார்கள்..

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்  உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.., கூட்டணியில், 25 சதவீதம் தொகுதி பங்கீடு பெற வேண்டும். ஆட்சியில் பங்கு தந்தால் தான், சட்டசபை தேர்தலுக்கு, தி.மு..,வுடன் கூட்டணி வைக்க வேண்டும். குறைந்த எண்ணிக்கையில், காங்கிரசுக்கு, ‘சீட்ஒதுக்கினால், கூட்டணியே வேண்டாம். தனித்து போட்டியிடலாம். தி.மு.., கூட்டணியில், காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ஆனால், தி.மு.., நடத்தும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு, அழைப்பு விடுப்பதில்லை.

கூட்டணி கட்சி என்ற மரியாதையை கூட, காங்கிரசாருக்கு தருவதில்லை. எனவே, இதை எல்லாம் சரி செய்ய வேண்டும். சரி செய்யாமல், கூட்டணி சேரக்கூடாது. கோஷ்டி தலைவர்களின் சிபாரிசில், மாவட்ட தலைவர் பதவியை பெற்றவர்கள், மாநில தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். இன்றைய கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் ஆவேசமாக பேசினார்கள்..

   திருநாவுக்கரசர் பேசுகையில், ”கூட்டணி குறித்து, இப்போது, எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கலாம். நம் கருத்தை, டெல்லியில் தெரிவிப்போம். அது வரைக்கும், தி.மு.., கூட்டணிக்கு எதிராக, வெளிப்படையாக பேச வேண்டாம்.

தி.மு..,வுடனான உள்ளூர் பிரச்சினைகளை, நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீட்டுக்காக, தி.மு..,விடம் பேசுவதற்கு, குழு அமைக்கப்படும் என்று வழக்கம் போல் பேசினார். திமுக தலைமை ஏற்கனவே டி.ஆர்.பாலு மூலம், திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று காங்கிரசு தலைமையிடம் கூறியுள்ளது. கோவை பாரதியார் பல்கலையின், ‘சிண்டிகேட்உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட சுயநிதி கல்லூரிகள் சங்கம், முதல் முயற்சியிலேயே வெற்றிக்கனியைப் பறித்துள்ளது.

பாரதியார் பல்கலையில், மூன்று பிரிவுகளில், சிண்டிகேட் உறுப்பினர் தேர்தல் நடப்பது வழக்கம்.

முதல்வர்கள் பிரிவில், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சின்னதுரை, கலைமகள் கல்லூரி மேலாண்மை பிரிவு இயக்குனர் ராமமூர்த்தி ஆகியோர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி பொதுப் பிரிவுக்கான, சிண்டிகேட் உறுப்பினர் தேர்தல்,  பொதுப்பிரிவில், பொள்ளாச்சி ராமு கல்லூரி செயலர் நித்தியானந்தம், ஆசிரியர் பிரிவில், அனைத்து பல்கலை சங்கம் சார்பில், திருநாவுக்கரசுதனியார் கல்லூரிகள் சங்கம் சார்பில், .ஜே.கே. கல்லூரி பிந்து, தேர்வு பெற்றனர்.

இரு பிரிவுகளின் கீழும், சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி சங்கம் சார்பில், முன்னிறுத்தப்பட்டவர்களே வெற்றி பெற்றுள்ளனர். தொலைதூர கல்வி மையங்களை நடத்துவது தொடர்பாக, பாரதியார் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், இந்த சங்கத்துக்கும் இடையே, கருத்து மோதல் நடந்து வந்தது.

இந்நிலையில், சிண்டிகேட்டில் சங்கத்தின் உறுப்பினர்கள் நுழைந்திருப்பது, பல்கலைக் கழகத்தின் வட்டாரத்தை அதிர வைத்து உள்ளது.சில வித்தியாசமான செய்திகளை  இளைஞர்களிடம் சொல்லி அதிர வைத்தார் தாத்தா.