Home சுடச்சுட எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்ய காலக்கெடு அளிக்கும் மசோதா பேரவையில்...

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்ய காலக்கெடு அளிக்கும் மசோதா பேரவையில் அறிமுகம்

8
0
SHARE

சென்னை, ஜன. 12&

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிடம் காலியான 4 மாதங்களுக்குள் புதிய துணைவேந்தர் நியமனம் செய்ய தமிழக சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  தமிழக சட்டப்பேரவையில் நேற்று  கேள்விநேரம் முடிந்ததும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த, சட்டமுன்வடிவில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தேர்வுக்குழு உறுப்பினருக்கும் துணைவேந்தர் பதவிக்கும் தகுதிப்பாடு எதுவும் வகுத்துரைக்கப்படவில்லை.துணைவேந்தரை நியமிப்பதற்கு துணைவேந்தர் நியமிப்பதற்காக பொருத்தமான நபரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினரால் வேந்தருக்கு பரிந்துரை செய்வதற்கு கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே  இந்த  நோக்கங்களுக்காக இந்த

சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள அல்லது மாநில அரசால் அல்லது மத்திய அரசால் நிறுப்பட்ட மருத்துவக் கல்லூரி எதிலும் அல்லது பல்கலைக் கழகம் எதிலும் அல்லது இரண்டிலும் சேர்த்து பேராசிரியராக அல்லது முதல்வராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள புகழ்பெற்ற கல்வியாளராக இருக்கிற அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குனராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் தகுதியானவர்.

துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்வு செய்வதற்கான பெயர் பட்டியலை தயாரிப்பதற்கான நடைமுறை  துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு  6 மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.  துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது 4 மாதத்தில் தொடங்குதல் வேண்டும்.

மேலும் தேர்வுக்குழு தன்னுடைய பரிந்துரையை அது அமைக்கப்பட்ட நாளில் இருந்து 4 மாதங்களுக்குள் வேந்தருக்கு தன்னுடைய பரிந்துரையை தாக்கல் செய்யப்படவேண்டும் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருந்தால் வேந்தர், தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும்  அவகாசம் அளிக்கம் அல்லது (2) ஆம் உட்பிரிவின்படி மற்றொரு பரிந்துரை குழு அமைக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here