Home தமிழகம் மத்திய அரசை பாராட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் வந்தால் தி.மு.க. பாராட்டும்

மத்திய அரசை பாராட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் வந்தால் தி.மு.க. பாராட்டும்

28
0
SHARE

சென்னை, ஜன. 12&

தமிழக அரசு மத்திய அரசை பாராட்டுவதின் மூலம் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் கிடைத்தால் தி.மு.. அதனை பாராட்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது.மாநில அரசு கேட்ட எதையுமே மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதை இந்த ஆளுநர்உரையின் மூலம் நாம் உணர முடிகிறது.ஆனாலும், இந்த ஆளுநர் உரையில் மனதாரநீங்கள் மத்திய அரசை பாராட்டி இருக்கின்றீர். அதற்காக நான்வருத்தப்படவில்லை. மத்திய அரசை பாராட்டுவதன் மூலம் தமிழக மக்களுக்கு பலதிட்டங்களைக் கொண்டு வருகின்றீர் என்று சொன்னால், மாநிலத்துக்கு தேவையானநிதிகளை நீங்கள் பெற்றுத் தந்தால்,அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடுபாராட்ட தி.மு.. தயாராக இருக்கிறது, காத்திருக்கிறது. எனவே, தி.மு..வைபொறுத்தவரையில் என்றைக்கும் எதிரி கட்சியாக அல்ல, எதிர் கட்சியாகசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இவ்வாறு பேசினார்.