Home தலையங்கம் அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம்…!

அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம்…!

8
0
SHARE

ச ட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம், படிகள் ஆகியவற்றை உயர்த்துவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை 19&ந் தேதி பட்ஜெட் தொடரில் முதல்வர் எடபாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் வகையில், அதற்கான சட்டமசோதாவை புதன்கிழமை (10&ந் தேதி) அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அதன்படி சட்ட பேரவை உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், ஈட்டுப்படி மாதத்திற்கு ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும்,  தொலைப்பேசி படி மாதத்திற்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், தொகுதிப்படி மாதத்திற்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், தொகுப்புப்படி  மாதத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.

அதேபோல் தற்போது அளிக்கப்படும் அஞ்சல்படி ரூ.2 ஆயிரத்து 500 ஆகவே தொடர்கிறது. இந்த ஊதிய உயர்வால் ஆண்டுக்கு ரூ.25 கோடியே 32 லட்சத்து 72 ஆயிரம் கூடுதலாக செலவு ஏற்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னர் மாதாந்திர ஊதியம், படிகள் சேர்ந்து ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு (எம்.எல்..) ரூ.55 ஆயிரம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது உயர்வின் மூலம் கூடுதலாக ரூ.50 ஆயிரம் சேர்த்து ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் வரை கிடைக்கும்.

எம்.எல்..க்களுக்கான இந்த ஊதிய உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனால் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு உரிய நிலுவைத் தொகையாக  ரூ.3 லட்சம் வரை ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கிடைக்கும்.

ஊதிய உயர்வுடன் இந்த நிலுவை தொகையும் அளிக்கப்பட உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஊதிய உயர்வு கிடைக்காது. அதேபோல் அண்மையில் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரனுக்கு

புதிய ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்..க்கள் பெறும் சம்பள விவரம் வருமாறு:&

தெலுங்கானா 2 லட்சத்து 50 ஆயிரம், டெல்லி  2 லட்சத்து 50 ஆயிரம், உத்தரப் பிரதேசம் 1 லட்சத்து 87 ஆயிரம், மராட்டியம் 1 லட்சத்து 50 ஆயிரம், ஆந்திரா 1 லட்சத்து 30 ஆயிரம், இமாசலப் பிரதேசம்  1 லட்சத்து 25 ஆயிரம், ஹரியானா  1 லட்சத்து 15 ஆயிரம், ஜார்க்கண்ட் 1 லட்சத்து 11 ஆயிரம், மத்தியப் பிரதேசம் 1 லட்சத்து 10 ஆயிரம், சத்தீஸ்கர் 1 லட்சத்து 10 ஆயிரம், பஞ்சாப் 1 லட்சம், கோவா  1 லட்சம், பீகார் 1 லட்சம், மேற்கு வங்கம்  96 ஆயிரம், கர்நாடகா 60 ஆயிரம், சிக்கிம்  52 ஆயிரம், குஜராத் 47 ஆயிரம், கேரளா ரூ.42 ஆயிரம், ராஜஸ்தான் ரூ.40 ஆயிரம், உத்தரகண்ட் ரூ.35 ஆயிரம், ஒடிசா ரூ.30 ஆயிரம், மேகாலயா ரூ.28 ஆயிரம், அருணாசலப் பிரதேசம் ரூ.25 ஆயிரம், அசாம் ரூ.20 ஆயிரம், மணிப்பூர் ரூ.18 ஆயிரத்து 500, நாகலாந்து ரூ.18 ஆயிரம், திரிபுரா ரூ.17 ஆயிரத்து 500 ஆகவும் உள்ளது.

7&வதுஊதியக்குழுவைஅனைத்துஅரசுதுறைகளுக்கும்சரியாகசெயல்படாதநிலையில்சட்டமன்றஉறுப்பினர்களுக்குமட்டும்

ஊதிய உயர்வு நியாயமாகுமா? என்ற கேள்வி எழுகிறது. மேலே குறிப்பிட்ட அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் தான், ஆனால் சம்பள விகிதத்தில் இத்துனை வேறுபாடு உள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு சாத்தியமானது போல்,

சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here