Home சுடச்சுட நல்லத்தங்காள் கரிக்கோயில் நீர் தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

நல்லத்தங்காள் கரிக்கோயில் நீர் தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

8
0
SHARE

சென்னை, ஜன. 12&

திருப்பூர் நல்லத்தங்காள் ஓடை நீர் தேக்கம் மற்றும் சேலம் கரிக்கோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட , முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உத்தரவில்,  திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நல்லதங்காள் ஓடை நீர்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண்  மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண்  மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர்   நல்லதங்காள் ஓடை நீர்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகள் பயனடையும் வகையில் நல்லதங்காள் நீர்த்தேக்கத்திலிருந்து 19&ம் தேதி முதல் 30&ம் தேதி வரை தகுந்த இடைவெளிவிட்டு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள 4831.36 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதை போன்று, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்,பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரிக்கோயில்நீர்த்தேக்கத்திலிருந்து ஆற்று பாசனம் மற்றும் கால்வாய் பாசன பகுதிகளுக்கு , பழைய ஆயக்கட்டு பகுதிகள் பயன்படும் வகையில் 20ம் தேதி முதல் அணையின் வலது மற்றும் இடது மதகுகள் மூலம் தினசரி வினாடிக்கு 40 .அடி 12 நாட்களுக்கு சுழற்சி முறையில் சிறப்பு நனைப்பாக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here