Home தமிழகம் இஸ்ரோதலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்சொந்த ஊரில் கிராம மக்கள் கொண்டாட்டம்

இஸ்ரோதலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம்சொந்த ஊரில் கிராம மக்கள் கொண்டாட்டம்

9
0
SHARE

நாகர்கோவில், ஜன.12&

இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகில் உள்ள சரக்கல்விளை கிராமத்தில் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரோ தலைவராக பணியாற்றி வரும் கிரண் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1980ஆம் ஆண்டு சென்னை எம்..டி யில் ஏரோ நாட்டிகள் பட்டம் பெற்ற இவர் 1982ஆம் ஆண்டு இஸ்ரோவில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு குழுவில் இணைந்தார். அப்போது அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

பின்னர் இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக கருதப்படும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக செயல்பட்டார்.

இந்நிலையில்இவர்தற்போதுஇஸ்ரோதலைவராகநியமிக்கப்பட்டுஉள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது சொந்த கிராமமான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல் விளை கிராமத்தில் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சிவன் படித்த பள்ளியான சரக்கல் விளை தொடக்க பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கிராம மக்கள் இனிப்புகள் வழங்கினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, பாகுபாடின்றி அனைவரிடமும் சகஜமாக பழகுவதோடு ஏராளமான ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி, கொடுக்கும் குணம் படைத்த சிவன் மென்மேலும் உயர் பதவிகளை அடைய வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தமிழ் வழி கல்வி பயின்று இன்று நாட்டின் உயர் பதவியை தங்கள் கிராமத்தை சேர்ந்த சகோதரன் அடைந்து இருப்பது தங்கள் கிராமத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த பெருமை என கிராமத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here