Home மற்றவை கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக முனையம் அமைப்பதை நிறுத்த வேண்டும்சுற்றுசூழல் துறை இயக்குனரிடம் மீனவர் சங்கங்கள்...

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக முனையம் அமைப்பதை நிறுத்த வேண்டும்சுற்றுசூழல் துறை இயக்குனரிடம் மீனவர் சங்கங்கள் மனு

7
0
SHARE

சென்னை, ஜன. 12&

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைப்பதை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும் என சுற்றுசூழல் துறை இயக்குநரிடம் மீனவர் சங்கங்கள் நேற்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடமான கோவளம் மற்றும் கீழமணக்குடி இடைப்பட்ட இடம் மீனவ மக்களின் பொது பயன்பாட்டு பகுதியாகும். துறைமுக ஆய்வுக்குழுக்களான ஆகியோர் இணைந்து வழங்கிய ஆய்வறிக்கையில் இப்பகுதி சுற்றுசூழல் பாதுகாக்கபடாத பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைப் படத்தில் (வரைப்பட் எண்.30) பாதுகாக்கப்பட்ட பகுதியாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இப்பகுதி அலையாத்தி காடுகளாலும், சவுக்கு மர காடுகளாலும் இயற்கையாக அமைந்த மணல் மேடுகளை கொண்ட பகுதியாக உள்ளது. மேலும், 2004 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமியின் போது இப்பகுதி தடுப்பணையாக இருந்து இங்குள்ள பல கிராமங்களை காப்பாற்றியது. இத்தகைய சுற்றுசூழல் முக்கியத்துவம் நிறைந்த பகுதியில் சட்டப்படி சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க முடியாது.

குறிப்பாக இப்பகுதி கீழமணக்குடி கழிமுகம் சேரும் இடமாகவும், கோவளம் தலக்குளத்தின் உதிர் நீர் கடலில் கலக்கு இடமாகவும் உள்ளது.

ஆனால் ஆய்வறிக்கையில்  எவ்வித நீரோடைகளும் இத்திட்டப்பகுதியில் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையில் இப்பகுதியில் கடலோர கிராமங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால். இதனை சுற்றி கோவளம், கீழமணக்குடி, மேலமணக்குடி, தாமரை குளம் உள்ளிட்ட கிராமங்கள் இங்குள்ளன.

எனவே, இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் மற்றும் தவறான ஆய்வறிக்கை தயார் செய்த துறைமுக ஆய்வுக்குழுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதில் தென்னிந்திய தலைவர் கு.பாரதி, மீனவர் கூட்டற்வு சங்கத் தலைவர் கே.சரவணன், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம் அ.ஜெயகுமார், தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் பி.மாறன் மற்றும் தமிழ்நாடு மீனவர் முற்போக்கு சங்கத் தலைவர் கே.ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here