Home சுடச்சுட சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஜப்பான் கடலோர கப்பல் சென்னை வருகை

சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஜப்பான் கடலோர கப்பல் சென்னை வருகை

9
0
SHARE

சென்னை, ஜன. 12

சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஜப்பான் கடலோரக் கப்பல் சென்னைக்கு இன்று வருகை தரஉள்ளது.

105 மீட்டர் நீளம் மற்றும் 55 பேர் கொண்ட பி.எல்.ஹச் வகையைச்சார்ந்த சுகரு என்ற ஜப்பான் கடலோரக் ரோந்து கப்பல் இன்று சென்னை வருகிறது.

பிரதமர் மோடியின் சாகர்மாலா(கடல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) திட்டத்தின் கீழ் இரு நாடுகளின் ஒத்துழைப்பு நிறுவன அமைப்பு ஒப்பந்தப்படி கடல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்த சாகர் உடற்பயிற்சி  இன்று முதல் வரும் 18ம் தேதி வரையில் தமிழகத்தில் நடைபெறஉள்ளது.

இந்த பயிற்சியானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக கடல்சார் ஒத்துழைப்பு, பாரம்பரிய கலாசாரபரிமாற்றம் எடுத்துரைக்கும் விதமாக அமையும். இந்த நேரத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளிகளை பார்வையிடவும், நட்பு ரீதியில் வாலிபால் போட்டியிகளும் விளையாடஉள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here