Home தமிழகம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதுபேரவையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறதுபேரவையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்

25
0
SHARE

சென்னை,ஜன.12&

இந்திய அளவில் தமிழகத்தில் இருந்து கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதல் பரிசையும், அண்ணா நகர் காவல்நிலையம் 5 வது பரிசையும் பெற்றுள்ளது என்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்கட்சித்தலைவர் மு..ஸ்டாலின் பேசும்போது, ஆளுநர் உரையில்  சட்டம் . ஒழுங்கு சிறப்பாக நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், நிலைமை என்னவென்றால், சமீபத்தில் வெளிவந்திருக்கும் தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால், நீங்கள் உரையில் சொல்லி இருப்பது உண்மையல்ல என்பது தெளிவாக தெரியவருகிறது.

இந்தியதண்டனைச் சட்டப்படியான வழக்குகளில் தமிழ்நாடு 39 மாநிலங்களில் 7 வது இடத்தில் இருக்கிறது. தென் மாநிலங்களில் 2 வது இடத்தில் இருக்கிறது. குற்ற ஆவணக்காப்பகம் பட்டியல் இட்டுள்ள 19 மாநகரங்களில் குழந்தைகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆயுதம், வெடி மருந்துகள் தொடர்பான சிறப்புச் சட்டங்களின் அடிப்படையில் நடைபெற்ற குற்றங்களில் சென்னை 32.9 சதவீதம் பெற்று முதல் மாநகரமாக உள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இவை ஆண்டுக் கணக்கில் சொல்லவில்லை, 2014 முதல் 2016 வரையிலானஅ.தி.மு.. ஆட்சி பற்றி தற்போது வெளியிடப்பட்ட புள்ளி விவரம் இப்படிதெரிவிக்கிறது. எனவே, சட்டம் ,  ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் இருந்து வருகிறது.

இதற்கு சமீபத்திய காரணங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். குற்றங்களில் ஈடுபடுவோர் மற்றும் குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்ததால் மாநிலத்தில் குற்றங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது,தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் 2016ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதன் காரணமாகத்தான்  இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான முதல் மெட்ரோ மாநகரமாக சென்னையும், பாதுகாப்பான பெருநகரங்களில் முதலாவதாக கோயம்புத்தூரும் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பெண்களுக்கெதிரான மொத்த குற்றங்களின் தமிழ்நாட்டின் குற்ற விகிதம் 10.7 சதவீதம் ஆகும்.

இதனை தேசிய சராசரி ஆன 51.4 சதவிகிதத்துடன் ஒப்பிடும் போது 40.7 புள்ளிகள் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் சிறந்த காவல் துறை நிலையம் தேர்வு செய்யப்பட்ட வகையில்  குற்றம் தடுப்பு , கண்டுபிடித்தல், துரிதமாக கண்டுபிடித்தல் ,மதிநுட்பத்துடன் நிகழ்வை  கையாளுதல், காவல் நிலையம் வந்தவர்களிடம் நடந்துகொள்ளுதல் , குற்றவாளிகளை கையாளுதல் போன்ற பல்வேறு 80 காரணிகள் மூலம்   தேர்வு செய்யப்பட்டதில், கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் காவல் நிலையம் இந்தியாவிலேயே முதல் பரிசை பெற்றிருக்கின்றது.

அதேபோல, அண்ணா நகர் காவல் நிலையம் 5 வது பரிசை பெற்றுள்ளது. இந்த காவல்நிலையங்கள் இந்திய நாட்டில் உள்ள 15,000 காவல் நிலையங்கள் செயல்பாட்டுடன்போட்டி போட்டு பரிசை பெற்றுள்ளன.   இது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமை. காவலர்கள் சிறப்பாக கையாண்டதற்கான சான்று. இந்தியாவிலுள்ள 15000 காவல் நிலையங்களில் இது  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னால், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.