Home சுடச்சுட 8 நாள் போராட்டம் முடிவுக்கு வந்ததுபஸ் ஸ்டிரைக் வாபஸ் இன்று முதல் வழக்கம் போல் பேருந்துகள்...

8 நாள் போராட்டம் முடிவுக்கு வந்ததுபஸ் ஸ்டிரைக் வாபஸ் இன்று முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும்

7
0
SHARE

சென்னை, ஜன.12&

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசுடன், கடந்த 4&ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது.

திடீர் போராட்டம்

இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் 8 நாட்களாக தொடர்ந்தது. இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொங்கல் வருவதால் மனசாட்சிப்படி தொழிலாளர்கள் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

அப்போது போராட்டத்தை நாங்கள் விலக்கிக் கொள்ளத் தயார் என தொழிற்சங்கம்  தரப்பில் தெரிவித்தனர். ஓய்வூதியம், ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவேண்டும், போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும், அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை ரத்து செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசு அவகாசம்

அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது அதில் நாங்கள் தற்போதைக்கு 2.44 என்று ஏற்கனவே அறிவித்த ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடியாது, போராட்டம் நடத்திய காலத்திற்கு ஊதியம் வழங்க முடியாது என்றும், போராட்டம் நடத்தியவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்திருந்தால் அந்த வழக்குகளை வாபஸ் வாங்க முடியாது என்றும் தெரிவித்தார். வேண்டுமென்றால் மத்தியஸ்தர் ஒருவரை நியமித்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்தார்.

நீதிபதி கேள்வி

இதுகுறித்து தொழிற்சங்க தரப்பு கருத்தை நீதிபதிகள் கேட்டனர். தொழிற்சங்கத்தரப்பினர் தற்போதைய இந்த நிலைமைக்கு கடந்த 7 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு வரவேண்டிய சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரவில்லை என்று நிலுவைத்தொகையை அரசு வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.கடந்த 7 ஆண்டுகளாக பணம் வழங்கவில்லை என்றால் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள், அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர்.

இத்தனை கேள்விகளையும் எழுப்ப காரணம் இவ்வளவு நுட்பமாக கேட்கவும், அரசு விசாரிக்கவும் காரணமே பொதுமக்கள் நலனை முன்னிட்டுதான். பொதுமக்கள் நலன் பாதிக்கப்படக் கூடாது, பண்டிகை காலங்களில் அவர்கள் சிரமமின்றிஉ இருக்க வேண்டும் எனபதற்காகவே நீதிமன்றம் இவ்வளவு தூரம் அரசையும் தொழிற்சங்கத்தையும் கேட்டுக்கொள்கிறது. ஆகவே அதை கருத்தில் கொள்ளுங்கள்என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்தியஸ்தர் நியமனம்

இதுகுறித்து பேசித் தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிப்பதாக தெரிவித்தனர்.பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட வேண்டும் என்பதை கோரிக்கையாக வைப்பதாகவும் அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுமாறும் ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை மவுண்ட் ரோடு பல்லவன் இல்லத்தில், தொ.மு.. தலைவர் சண்முகம் மற்றும் சி..டி.யு. சங்க தலைவர் சவுந்திரராஜன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

போராட்டம் வாபஸ்

அப்போது அவர்கள் கூறியதாவது:&

நமது போராட்டம வெற்றி அடைந்துவிட்டது என்று கூறி நீதிமன்றத்தின் உத்தரவை அவர் விளக்கிக் கூறினார். பல்லவன் இல்லத்தில் தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக சவுந்திரராஜன் அறிவித்தார். நாளை (அதாவது இன்று) முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பேருந்து தொழிலாளர்களின் போராட்டத்தால், பொங்கல் முன்பதிவு தடைப்பட்டது. இதனால் தென் மாவட்டத்தை சேர்ந்த பலரும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் ஆகி இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்து உள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here