Home உலகம் பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்க திட்டம்?சீன செய்தித் தொடர்பாளர் மறுப்பு

பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்க திட்டம்?சீன செய்தித் தொடர்பாளர் மறுப்பு

8
0
SHARE

பிஜிங், ஜன. 11&

பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை சீனா மறுத்து உள்ளது.

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ தளம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் சீன பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அந்த பத்திரிகை செய்தியில் ‘‘பாகிஸ்தான், சீனாவின் நட்புறவை பலப்படுத்தும் விதமாக பலுசிஸ்தான் மாகாணத்தின் ஜிவானி என்ற இடத்தில் சீனா கடற்படை தளம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு உள்ளது.’’

‘‘அதற்காக ஜிவானியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ படைதளத்தை குத்தகைக்கு எடுக்க பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ராணுவ தளம் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் கூட்டமைப்பில் கட்டப்பட்ட ஈரானின் சபஹார் துறைமுகம் அருகே அமைந்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியை அடிப்படையாக கொண்டு குளோபல் டைம்ஸில் இந்த செய்தி வெளியானது.

இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என்றும் பாகிஸ்தானில் கடற்படை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என சீனா நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளார் லூ காங் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பாகிஸ்தானில் கடற்படை தளம் அமைப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘‘நீங்கள் குறிப்பிடும் விஷயம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என லூ காங் பதிலளித்தார்

‘‘சீனா & பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய பகுதி ஆகும். எனவே இரு நாடுகளும் பொருளாதார தாழ்வாரம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளன  என லூ காங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here