Home சுடச்சுட பொங்கலை முன்னிட்டு சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்போக்குவரத்து கழகம் அறிவிப்பு

8
0
SHARE

சென்னை, ஜன. 11&

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் பயணிகள் ஏறும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு)ல் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். .சி.ஆர். (கிழக்கு கடற்கரைசாலை) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தத்தில் (அதாவது சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம்) இருந்து புறப்படும்.

விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட) தாம்பரம் சானிடோரிய அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வேலூர் மார்க்கமாக பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த நான்கு தடப்பகுதிகளில் செல்லும் பேருந்துகளுக்கு 11, 12 மற்றும் 13. ஆகிய தேதிகளில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் 11ந் தேதி முதல் 13ந் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் சென்று பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இத்தடப் பகுதிகளில் பயணம் செய்ய உள்ள பிற பயணிகளும் அந்தந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கு சென்று பயணம் செய்யுமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்(மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு) வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

வழித்தட மாற்றங்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியில் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.

கார் மற்றும் இதர வாகனங்கள் 11ந் தேதி முதல் 13ந் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம்  செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்  செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்

மேலும், இணைப்பு பேருந்துகள் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டுநர்கள் இப்போக்குவரத்து மாற்றங்களுக்கு ஏற்ப, தங்கள் பயணத்தை அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here