Home தமிழகம் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள்: நிவாரணம் அரசால் கணக்கிடப்படுகிறதுஅமைச்சர் சி.சீனிவாசன் தகவல்

யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள்: நிவாரணம் அரசால் கணக்கிடப்படுகிறதுஅமைச்சர் சி.சீனிவாசன் தகவல்

29
0
SHARE

சென்னை, ஜன. 11&

யானைகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு, பலத்த காயம் ஏற்படுதல், பயிர்ச்சேதம், தென்னை மரம் போன்ற இழப்புகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிவாரணத் தொகை மற்றும் பயிர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது  என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் பி.செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதி, கொடைக்கானல் தாலுக்காவைச் சேர்ந்த தாண்டிக்குடி கருப்பண்ணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த  மூக்கம்மாள் கடந்த 9 தேதி காபி தோட்டத்தில் பணியாற்றி வந்தபோது யானை தாக்கி உயிரிழந்திருக்கிறார்.அவருக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வருமா? எனவும், கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள வாழைப் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்ததற்கு, மாவட்ட வன அலுவலர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.  அந்த குழுவில் கணேசன் என்கிற யானை கணக்கெடுக்கும் அந்தப் பகுதி வன அலுவலர்களோடு ஆய்வு மேற்கொண்டதில் தற்போதைய நிலை என்ன? என கேட்டார்.

அதற்குபதிலளித்துவனத்துறைஅமைச்சர்திண்டுக்கல்சி.சீனிவாசன் கூறும்போது, திண்டுக்கல் வனக்கோட்டம், கொடைக்கானல் வட்டம், வத்தலகுண்டு வனச்சரகம், தாண்டிக்குடி கிராமம், பெருங்கானல் என்ற பகுதியில் வசிக்கும் மூக்கம்மாள் (50) என்பவர் கடந்த 9ந் தேதி மதியம் சோனைமுத்து என்ற விவசாயியின் காப்பித் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றபோது, யானை தாக்கியதால் உயிரிழந்தார்.அவரது உடலினை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் வனத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானை தாக்கி உயிரிழந்த  மூக்கம்மாளின் குடும்பத்திற்கு  உடனடி நிவாரணத் தொகையாக ரூபாய் 50 அயிரம்  வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வனச்சரக அலுவலரின் முதல் தகவல் அறிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் மனு, காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், 2 புகைப்படங்கள்போன்ற ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதும் மீதமுள்ள ரூ.3.50 லட்சம், யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் 3 சரகங்களை உள்ளடக்கிய கிராமங்களில் அவ்வப்போது விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.  மனித உயிரிழப்பு, பலத்த காயம் ஏற்படுதல், பயிர்ச்சேதம், தென்னை மரம் போன்ற இழப்புகளுக்கு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிவாரணத் தொகை மற்றும் பயிர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படுகிறது  என தெரிவித்தார்.