Home சம்பவம் கன்னியாகுமரி ஜோயாலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரி சோதனை

கன்னியாகுமரி ஜோயாலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரி சோதனை

8
0
SHARE

நாகர்கோவில், ஜன.11&

தமிழகம் மற்றும் கேரளாவில் அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கேரளா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில், நகைகள் விற்பனை மூலம் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட ஜாய் ஆலுகாஸ் நகைகடைகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள ஜாய் ஆலுக்காஸ் நகை கடையிலும் நேற்று காலை வந்த 8 வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here