Home தமிழகம் தமிழகத்தில் ஜி.எஸ்.டி. விதிப்பு யாரால் வந்தது?அ.தி.மு.க., தி.மு.க. கடும் வாக்குவாதம்

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. விதிப்பு யாரால் வந்தது?அ.தி.மு.க., தி.மு.க. கடும் வாக்குவாதம்

18
0
SHARE

சென்னை, ஜன.11&

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. விதிப்பு யாரால் வந்தது? என்று பேரவையில் அ.தி.மு.., தி.மு.. இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் எ..வேலு, சரக்கு மற்றும் சேவை வரி வெளிநாட்டில் அதிகப்பட்சமாக 17 சதவீதம் தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 28 சதவீதம் இருப்பதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 25 சதவீதம் உள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீதம் உள்ளது. வெளிநாட்டில் மிக குறைவாக உள்ளது. என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்ட  அமைச்சர் ஜெயக்குமார், உறுப்பினர் தகவலை சரியாக வைத்துக்கொண்டு பேச வேண்டும். அமெரிக்காவில் ஜி.எஸ்.டி.வரி இல்லை. (அப்போது தி.மு.. உறுப்பினர்கள் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆடம்பர பொருட்களுக்கு மட்டும்தான் 28 சதவீத வரி.மற்ற பொருட்களுக்கு இல்லை. பட்டாசுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரியை அரசு எடுத்துக் கூறி குறைக்கப்பட்டுள்ளது.முதல் ஜி.எஸ்.டி.கூட்டத்தில் 66 பொருட்களுக்கும், அதன் பிறகு 234 பொருட்களுக்கும், பின்னர் சில பொருட்களுக்கும் என ஜி.எஸ்.டி.வரி குறைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அனைத்து பொருட்களுக்கும் 5,12 சதவீதம் வரை  ஜி.எஸ்.டி.வரி விதிப்பு உள்ளது.  காங்கிரஸ் ஆட்சியின் போது, நீங்கள் கூட்டணியாக இருந்த போது நீங்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தீர்கள். இதனை தொடர்ந்து பேசிய எ..வேலு, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து, கட்டுமானத் தொழில் பாதிக்கபட்டுள்ளது. வணிகர்கள் மாதம் 3 முறை எனஆண்டிற்கு 36 முறை கணக்கு காட்ட வேண்டி உள்ளது என கூறுகின்றனர். உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது என்றார்.

அப்போது காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 28 சதவீதம் என்று காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் இங்கே குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் அதிகபட்சமாக ஜி.எஸ்.டி. வரி 15 சதவீதம் என்று தான் சொன்னோம். எனவே எங்கள் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது. அப்போது துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், ஜி.எஸ்.டி. வரிக்கு பிள்ளையர் சுழிப்போட்டதே நீங்கள் தான்(காங்கிரஸ்), தி.மு..வும் அதை ஆதரித்தது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம், ஜி.எஸ்.டி. கொண்டு வருவதற்கு முன்னர் வாட் வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டது. அதனை அ.தி.மு.. ஆட்சியில் 2006ம் ஆண்டு வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதனை அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் 2006ல் தி.மு..ஆட்சிக்கு வந்த உடன் வாட் வரி விதித்தை ஆதரித்தது நீங்கள் தான். அப்போது எதிர்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன், முதல்வர் ஜெயலலிதா எதிர்த்ததை எல்லாம் நீங்கள் ஏன் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்.அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம், மதிப்பு கூட்டு வரியை ஏற்க மாட்டோம் என கூறினோம்.

நாங்கள் 2006 ஆண்டு ஆட்சியில் இருக்கும் வரை ஏற்கவில்லை. கடைசிக்கூட்டத்திலும் அதனை ஏற்க முடியாது என தெரிவித்தோம். ஜி.எஸ்.டி.வரும் போதும் தமிழகம் பாதிக்கிறது என கூறி ஒத்து கொள்ளமாட்டோம் என கூறினோம். அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், ஜி.எஸ்.டி.வரியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறிய அனைத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும் அமைந்ததுடன், மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பையும் மத்திய அரசு அளிக்க வேண்டும் என கூறி, அதனையும் சட்டமாக இயற்றி, தற்பொழுது மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வழி வகுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான்.

அப்போது எதிர்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் விளக்கம் கூறுவது பற்றி குறை சொல்லவில்லை. சில தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார். அதை வைத்து பார்க்கும் போது, ஆடிட்டர் குருமூர்த்தி அவரைப்பற்றி சொன்னது உண்மையோ? என்று தோன்றுகிறது.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார், 10 மாதம் இந்த ஆட்சி சிறப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆண்மை இருக்கிறது. வாட் வரி விதிப்பு முறையில் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை ஏன் பெறவில்லை.

17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதும் ஏன் நிதி தன்னாட்சி பெற்றுத்தரவில்லை.நிதி தன்னாட்சி காக்கும் அரசாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு உள்ளது. இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.