Home விளையாட்டு விராட் கோலியை வீழ்த்தினால் வெற்றி எளிதுபிலாண்டர் பேட்டி

விராட் கோலியை வீழ்த்தினால் வெற்றி எளிதுபிலாண்டர் பேட்டி

9
0
SHARE

செஞ்சூரியன், ஜன.11&

விராட் கோலியை விரைவாக வீழ்த்தினால் இந்திய அணியை எளிதாக வெற்றிக் கொள்ளலாம் என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் கூறி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கேப்டவுன் நகரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் 2&வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நாளை மறுதினம் (13&ந் தேதி) நடக்கிறது. முதல் போட்டியில், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் பிலாண்டர்.

அவர், விராட் கோலியை விரைவாக வீழ்த்துவதே எங்கள் இலக்கு என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:&

விராட் கோலி அருமையான, அதிரடியான ஆட்டக்காரர். அவரை வீழ்த்துவதுதான் எங்களது இலக்காக இருந்தது. அவரை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் எங்களுக்கு வெற்றி எளிது என்று கணித்தோம்.

அதன்படியே 2 இன்னிங்ஸ்களிலும் அவரை விரைவில் ஆட்டமிழக்கச் செய்தோம். விராட் கோலிக்கு தொடர்ந்து அவுட் ஸ்விங்கர் பந்துகளையே வீசினேன். அதில் ஒரு பந்தில் அவர் சிக்கிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here