Home விளையாட்டு ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியல் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா முதலிடம்விராட் கோலி 3&ம்...

ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியல் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா முதலிடம்விராட் கோலி 3&ம் இடத்திற்கு சரிவு

17
0
SHARE

துபாய், ஜன. 11&

தென் ஆப்பிரிக்க வேகப்புயல் கேஜியோ ரபாடா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைப் பின்னுக்குத் தள்ளி ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆண்டர்சன் 887 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றிருந்தார், ரபாடா இவரைக் கடந்து சென்று 888 புள்ளிகள் பெற்றுள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் ஒரேயரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய ஆண்டர்சனின் தரவரிசைப் புள்ளிகள் 5 குறைந்தது.

மாறாக கேப்டவுன் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக ரபாடா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுகுறித்து முதல் நிலை குறித்து ரபாடா கூறியதாவது:&

உலகின் நம்பர் 1 பவுலராக விளங்குவது சிறப்பு வாய்ந்தது. இது ஒரு கனவனுபவம். கிரிக்கெட் ஆட்டத்தை நாம் தொடங்கும்போது நாம் காணும் கனவு இதுவாகத்தானே இருக்கும்.

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு, எனவே எனக்கு ஆதரவளித்த சக வீரர்களுக்கும் நன்றி. இந்த ஆண்டு தொடக்கம் அருமையாக அமைந்தது, தொடர்ந்து வெற்றிகளை ஈட்டுவோம் என்று கருதுகிறேன்.

இந்திய வீரர்களை அனாயசமாக வீழ்த்திய வெர்னன் பிலாண்டர் 12ம் இடத்திலிருந்து 6ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதலிடம். 947 புள்ளிகள். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஆகியோரை வீழ்த்தி, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2ம் இடம் பிடித்தார்.

புஜாரா 3ம் இடத்திலிருந்து 5ம் இடத்துக்கு சரிந்தார். .சி.சி. தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்க 2&ம் இடத்தில் உள்ளது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் ரவீந்திர ஜடேஜா 3&வது இடத்திலும், அஸ்வின் 4&ம் இடத்திலும் உள்ளனர்.