Home விளையாட்டு கர்நாடக மாநில கிரிக்கெட் போட்டி ஜூனியர் ராகுல் அசத்தல் சதம்

கர்நாடக மாநில கிரிக்கெட் போட்டி ஜூனியர் ராகுல் அசத்தல் சதம்

29
0
SHARE

பெங்களூரு, ஜன. 11&

கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் விவேகானந்தா, மல்லையா அதிதி சர்வதேச பள்ளிகள் மோதின. மல்லையா அதிதி சர்வதேச பள்ளி அணியில் ராகுல் திராவிட் மகன் சமித் (வயது 12) மற்றும் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த சமித் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 500 ரன்கள் எடுத்தது. இதில் ஆர்யன் ஜோஷி 154 ரன்கள் குவித்தார். ஜூனியர் ராகுல் சமித் 150 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து விளையாடிய எதிரணி 88 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. சமித் இதற்கு முன்னரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் அவர் 125 ரன்கள் அடித்துள்ளார்.மேலும், 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 12வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் 3 அரைசதம் (77*, 93, 77) அடித்து அசத்தினார். அப்போது அவருக்கு 9 வயது தான் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் டிராவிட் தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சுனில் ஜோஷி, வங்கதேச அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.