Home அரசியல் கும்மிடிபூண்டியில் 2.64 லட்சம் வாக்காளர்கள்கோட்டாட்சியர் தகவல்

கும்மிடிபூண்டியில் 2.64 லட்சம் வாக்காளர்கள்கோட்டாட்சியர் தகவல்

14
0
SHARE

பொன்னேரி, ஜன. 11&

பொன்னேரி வருவாய் கோட்டத்தில் கும்மிடிபூண்டி, பொன்னேரி தனி தொகுதி என 2சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் இறந்தவர் மற்றும் இடம் சென்றவர் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டும் 2018&ம் ஆண்டில் 18 வயது பூர்த்தியானவர்களுக்கு முதல் முறை வாக்காளர்களாக சேர்த்தல் பணி நிறைவடைந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முத்துசாமி பட்டியலை வெளியிட்டார்.

அப்போதுதாசில்தார்சுமதி, மண்டலதுணை தாசில்தார் சீனிவாசன், தேர்தல் துணைதாசில்தார் பழனி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

கும்மிடிபூண்டிதொகுதியில் 1,29,328ஆண் வாக்காளர்களும் 1,35,223பெண் வாக்களர்களும் 34 மூன்றாம் பாலினத்தில் வரும் மொத்த 2,64,585 நபர்களும் பொன்னேரி தனி சட்டமன்ற தொகுதியில் 1,22,267ஆண் வாக்காளர்களும் 1,26,484பெண் வாக்காளர்களும் 59 மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்தம் 2,48,810பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here