Home சுடச்சுட இறுதி பட்டியல் வெளியீடு தமிழகத்தில் மொத்தம் 5.86 கோடி வாக்காளர்கள்

இறுதி பட்டியல் வெளியீடு தமிழகத்தில் மொத்தம் 5.86 கோடி வாக்காளர்கள்

10
0
SHARE

சென்னை, ஜன. 11&

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம்வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில், 5.86 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2.90 கோடியும், பெண் வாக்காளர்கள் 2.96 கோடியும் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2018ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன. சிறப்பு சுருக்க முறை திருத்த காலத்தின் போது , வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக ,6,16,741 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில், 5,88.396 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.

2018ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியலின்படி , தமிழகத்தில் ,5.86 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 2.90 கோடியும், பெண் வாக்காளர்களில் 2.96 கோடி பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 5197 பேரும் உள்ளனர்.

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்கள் படி , தமிழகத்தில், அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட சட்ட மன்ற தொகுதி காஞ்சிபுரம் மாவட்டம் , சோழிங்க நல்லூர் தொகுதியில், 6.24.365 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் 3,13.818,  பெண்கள் 3,10,471 , மூன்றாம் பாலினம், 3,219 பேர் உள்ளனர். இளைய வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாக கன்னியாகுமரி உள்ளது. ஆண்கள் 3,913, பெண்கள் 3,219 என மொத்தம் 7,133 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி, துறைமுகம் ஆகும். இந்த தொகுதியில், ஆண்கள் 86.641, பெண்கள் 78,921 என மொத்த வாக்காளர்கள் 1,65,610 உள்ளனர். வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், விபரங்களுக்கு, தலைமை தேர்தல் அதிகாரியின் லீttஜீ;//மீறீமீநீtவீஷீஸீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற வலைத்தளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here