Home சிறப்புச் செய்திகள் மதுசூதனன் கடிதத்தால் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி…!

மதுசூதனன் கடிதத்தால் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி…!

19
0
SHARE

எடப்பாடி தலைமையில் செயல்படும் அ.தி.மு.. அரசின் செயல்பாடுகள், முடங்கிவிட்டது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடங்கி 7 நாட்களாகியும், அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. தமிழகமே ஸ்தம்பித்து போய் உள்ளது.

குட்காமாமூல்விவகாரத்தில்நடவடிக்கைஎடுப்பதற்காக, உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட விஜிலென்ஸ் ஆணையர் ஜெயக்கொடி ஐ..எஸ் மாற்றப்பட்டுவிட்டார்.

ஜெயலலிதாவால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, .பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும் போது, தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்ட ஞானதேசிகன் ஐ..எஸ். அதிகாரம் உள்ள பதவியான தொழில் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா பெயரில் ஆட்சி, ஆனால் ஜெயலலிதாவின் கொள்கை, நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதுதான் வேடிக்கையாக உள்ளது. சட்டமன்றத்தில் ஆளுநரை விமர்சனம் செய்யக்கூடாது, ஆனால் ஆளுநர் சட்டமன்றத்தில் படிக்கப்பட்ட உரையை விமர்சனம் செய்யலாம் என்ற சட்டசபை மரபுகள் கூட பின்பற்றுவதில்லை என்று தாத்தா கொஞ்சம் சத்தமாக புலம்பி தள்ளினார். இளைஞர்கள் தாத்தாவை அமைதிப்படுத்தினார்கள்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி கமிஷனில் ஜெ.க்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன், காலை, 10:30 மணிக்கு விசாரணை கமிஷனில் ஆஜரானார். அவரிடம், 11:30 மணிஅளவில் விசாரணை துவங்கியது. அப்போது, ‘ஜெ.வுடன் யாரெல்லாம் இருந்தனர். ஜெ.க்கு ஏற்பட்ட நோய் பற்றி தெரியுமா; அதற்கு, எந்தெந்த மருத்துவமனைகளில், அவர் சிகிச்சை பெற்றார்.

கடந்த, 2016 செப்., 22ல், நீங்கள் உடன் இருந்தீர்களா; அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும்போது என்ன நடந்ததுஎன, சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

ஆனால் பூங்குன்றம் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மவுனமாக இருந்தார்..இதனால் அதிருப்தி அடைந்த ஆறுமுகசாமி, கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்ற பல முறை கூறினார்.

கடைசியில்  பூங்குன்றன் பதில் அளித்து கொண்டுஇருந்த போது, மின்சாரம் தடைப்பட்டதால், விசாரணை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறை மின்சாரம் தடைப்பட்டதால், விசாரணை முடித்து கொள்ளப்பட்டது.

பூங்குன்றத்தையும், பெருமாள்சாமியும் விசாரணைக்கு ஆஜராகும் முன்பு காலையிலேயே துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை வீட்டில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்கள்.

பூங்குன்றம்தனக்குநெருக்கமானவர்களிடம்என்னசெய்வதுஎன்றுதெரியவில்லை. நான் வாயை திறந்தால் பல ஐ..எஸ். அதிகாரிகள் சிக்கிக் கொள்வார்கள் என்று புலம்பி உள்ளார்.

ஆர்.கே.நகரில் அ.தி.மு.. தோல்வியடைந்தது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக்காதது ஏன்.? எனது தோல்விக்கு யார் காரணம். தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றியாக இருக்கும். நான் தோற்றது கழகத்தின் தோல்விதானே? தி.மு.. தனது தோல்வி குறித்து ஆராய்ந்து தேர்தலில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை கூண்டோடு நீக்கியுள்ளனர்.

ஆனால் இப்போது வரை தோல்வி குறித்து அ.தி.மு.. எந்த ஆய்வு கூட்டமும் நடத்தவில்லை. எனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில் தரவில்லை எனில் எனது முடிவு தன்னிச்சையாக இருக்கும்.

கடிதத்தில் முதல்வரிடம் மதுசூதனன் 14 கேள்விகள் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவைத்தலைவர் மதுசூதனனின் இந்த திடீர் கடிதத்தால் அ.தி.மு.. தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கை அன்று காலையிலேயே முதல்வர் வீட்டில், மதுசூதனனுக்கும் முதல்வருக்கும் கடுமையாக வாக்குவாதம் நடந்தது. உடனடியாக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், முதல்வர் வீட்டிற்கு வந்து மதுசூதனனை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்.

இதுபோன்று பல அதிர்ச்சியான தகவல்களை கூறிய தாத்தா, இளைஞர்களை அனுப்பிவிட்டு, நண்பர் காரில் அவசரமாக புறப்பட்டு சென்றார்.