Home தமிழகம் கூடங்குளம் விரிவாக்க திட்டத்தை நிறுத்த வேண்டும்சுப.உதயகுமார் கோரிக்கை

கூடங்குளம் விரிவாக்க திட்டத்தை நிறுத்த வேண்டும்சுப.உதயகுமார் கோரிக்கை

41
0
SHARE

சென்னை, ஜன. 11&

கூடங்குளத்தில் ஏற்கனவே உள்ள முதல் இரண்டு அணு உலைகள் செயல்பாடுகள் குறித்து தெரியாத நிலையில் புதிதாக கட்டப்பட உள்ள 3, 4 அணு உலை திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணுமின் நிலயங்களைப் பற்றிய வழக்கு தணிக்கையாளர் குழு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கணக்கு தணிக்கையாளர் அறிக்கைப்படி அரசு நாட்டு மக்கள் பணத்தை விரயம் செய்து இருகின்றார்கள். கூடம்குளம் அணுமின் நிலயத்தில் தடுக்கப்பட வேண்டிய வட்டித் தொகைகளை கட்டி இருகின்றார்கள். கடன் வாங்கியதில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை.

மின்சாரக் கட்டணம் நிர்ணயத்ததில் பல கோளாறுகள் நிகழ்ந்திருகின்றன. பல பிரச்சனைகளை கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது. இந்திய அணுசக்தி துறை ரஷ்ய நிறுவனங்களை பாதுகாப்பது ஏன்?. இந்த கணக்கு தணிக்கையாளர் அறிக்கை பண நிர்வாக பற்றிதான் ஆய்வு செய்திருகின்றது. மேலும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஒரு பேராபத்தாக விளைவிக்கின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி மவுனம் காக்கின்றார். முதல் இரண்டு அணு உலைகள் பற்றிய ஒரு சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு வெள்ளை அறிக்கை தமிழக மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் தரப்பட வேண்டும்.

3 முதல் 6 வரை கூடுதல் அணு உலைகளை கட்டக்கூடாது. முதல் 2 அணு உலைகளே மிகப் பெரிய பிரச்சனைகளோடு இருகின்றபோது, அவற்றின் தரம் பற்றி அவற்றினால் வரும் நஷ்டங்கள் பற்றி மிகப்பெரிய அறிக்கை ஒன்று வெளியாகி இருகின்ற நிலையில் 3 முதல் 6 அணு உலைகள் கட்டும் பணி நிறுத்தப்பட வேண்டும். உண்மையை சொல்லி நாட்டு நன்மைக்காக போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இத்திட்டத்தால் மொத்தமாக சுமார் ரூ.2000 கோடிக்கு மேல் அதிகமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு இழப்பு ஏற்படுத்தியிருகின்றார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மக்களுக்கான அரசாக இயங்கவில்லை.

தங்களையும் தங்கள் பதவிகளையும், அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் பாதுகாக்க மட்டுமே இந்த அரசு இயங்குவதால் இந்த அறிக்கையை மிக எளிதாக  எடுத்துக்கொண்டிருகின்றார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒரு எம்.எல்.ஏவோ அல்லது எம்.பியோ தரமற்ற உதிரி பாகங்கள்  பயன்படுத்தியதுப் பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.