Home சம்பவம் திருவல்லிக்கேணி விடுதியில் பின்லாந்து நாட்டு பெண் சாவுஅளவுக்கதிகமான போதையால் விபரீதம்

திருவல்லிக்கேணி விடுதியில் பின்லாந்து நாட்டு பெண் சாவுஅளவுக்கதிகமான போதையால் விபரீதம்

10
0
SHARE

சென்னை, ஜன. 11&

சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் பின்லாந்து நாட்டு பெண் அளவுக்கதிகமான போதை மாத்திரை உட்கொண்டதால் இறந்துப்போனார். அவரது இறப்பு குறித்து காதலனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹெலியே (27) என்ற இளம் பெண் தங்கியிருந்தார். அவருடன்,  காதலன் ஆப்லே (23)என்பவரும் தங்கியிருந்ததாக தெரிகிறது.

கடந்த 9&ம் தேதி அன்று இவர்கள், சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ளனர். சென்னை வந்த இவர்கள்,  பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தனர். நேற்று முன்தினம் மாமல்லபுரத்துக்கு சென்றுள்ளனர். பின்னர், இருவரும் இரவில் லாட்ஜில் தங்கினர்.

இந்தநிலையில் காலையில் ஹெலியே படுக்கையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து  தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் பின்லாந்து பெண்ணின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஹெலியே இறந்தது குறித்து காதலர் ஆப்லேயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் மது அருந்தியதாகவும், ஹெலியே உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சலுடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் மாத்திரை சாப்பிட்டு விட்டு தூங்கினார். காலையில் அவரை எழுப்பிய போதுதான் இறந்து விட்டது தெரிய வந்தது என்று தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஹெலியே அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது.

தனது காதலன் ஆப்லேயுடன் சேர்ந்து மதுவில் போதை மாத்திரைகளை கலந்து சாப்பிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனாலும் பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம்  விடுதிக்கு வரும்போதே இருவரும் போதையில் தள்ளாடியபடியே வந்துள்ளனர். நேற்று காலை வரையிலும் ஆப்லேவுக்கு மயக்க தெளியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். காலையில் ஹெலியே லாட்ஜில் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்ததும் ஆப்லே  கத்தியபடியே ஓடி வந்துள்ளார். அப்போது ஆட்டோ பிடிப்பதற்கும் அவர் வெளியில் ஓடி உள்ளார். இதை அறியாமல் அவர் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக லாட்ஜி ஊழியர்கள் கருதி பின்னால் விரட்டிச் சென்று பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்லேயும், ஹெலியேயும் வந்த சுற்றுலா விசா வருகிற 21&ந் தேதியுடன் முடிகிறது. டெல்லி சென்று அங்கிருந்து பின்லாந்து செல்ல அவர்கள் திட்ட மிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் ஹெலியே இறந்துவிட்டார். இதனால் இதுபற்றி அந்நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து ஹெலியேவின் உடலை பின்லாந்துக்கு கொண்டு செல்லவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here