Home தமிழகம் கிருஷ்ணகிரி அணையின் 8 உபரி நீர் கதவுகளை புதிதாக மாற்ற நடவடிக்கைதி.மு.க. உறுப்பினருக்கு முதல்வர்...

கிருஷ்ணகிரி அணையின் 8 உபரி நீர் கதவுகளை புதிதாக மாற்ற நடவடிக்கைதி.மு.க. உறுப்பினருக்கு முதல்வர் பதில்

10
0
SHARE

சென்னை, ஜன. 11&

கிருஷ்ணகிரி அணையின் 8 உபரி நீர் கதவுகளை புதியதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அணையின் உபரிநீர் வழிந்தோடி கதவு எண் 1 பாதிப்படைந்துள்ளது என்று பேரவையில் தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் எ..வேலு பேசினார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் கிராமத்தில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டுமான பணி 1955ல் ஆரம்பிக்கப்பட்டு 1957ல் முடிவுற்றது.

1958 முதல் இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு 9012 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெற்று வருகிறது. இந்த அணையின் கதவினை ஆய்வு செய்த போது, அதன் மேற்பகுதியும் மற்றும் மேலே தூக்குவதற்கும் கீழே இறக்குவதற்கும் பயன்படும் உருளைகள் அதன் வரித்தட சட்டத்தின் உள்ளேயே நல்ல நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

கதவின் இடபக்க அடிப்புறம் பாதிக்கப்பட்டு, மேற்புறமாக திருகி இருந்த காரணத்தினால் அதன் மூலம் நீர் கசிவது தெரியவந்தது. அணை எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அவசர கால நடவடிக்கையாக இதர உபரிநீர் வழிந்தோடிகள் மற்றும் ஆற்று மதகுகளின் மூலம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு அணை பாதுகாப்பான நிலைக்கு ஏற்கனவே கொண்டுவரப்பட்டது.

நீர் மாசுற்று அமில நிலையில் இருந்ததால் 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதவுகளில் அரிப்பு ஏற்பட்டதே பாதிப்பிற்கு காரணம் என தெரிய வருகிறது. கிருஷ்ணகிரி நீர் தேக்க வரைவு அறிக்கையின்படி பாசனத்திற்கு ஜுலை முதல் நவம்பர் வரை 120 நாட்களுக்கு ஒரு போகத்திற்கு மட்டும் நீர் வழங்க முடியும்.

தற்போது அணையில் 524 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 257 கனஅடி வீதம் வந்து கொண்டிருப்பதால் தற்போது நடைபெறும் பாசனத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நீர் வழங்க இயலும்.

19.12.2017 அன்று நிபுணர்கள் தளத்தினைஆய்வு செய்தனர். ஆய்வின் போது தளத்திலேயே நீரின் தன்மை ஆய்வு செய்யப் பெற்று அமில நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.

விரிவான ஆய்விற்கு பின்னர் தகுந்த வகையான கூட்டுப் பொருள் மற்றும் மேல்பூச்சினை மதகு கதவிற்கு பயன்படுத்தலாம் என அறியப்பட்டு அணைக்கட்டில் உள்ள 8 உபரி நீர் கதவுகள் புதியதாக மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here