Home சுடச்சுட குட்கா விவகாரம் பற்றி பேச அனுமதி மறுப்பு பேரவையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு

குட்கா விவகாரம் பற்றி பேச அனுமதி மறுப்பு பேரவையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு

8
0
SHARE

சென்னை, ஜன. 11&

பேரவையில் குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.. வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே இந்த அவையில் பேசப்பட்ட ஒரு விஷயம் குறித்து மீண்டும் பேச முற்படுகிறேன். குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார் என்று பேசியபோது குறுக்கிட்ட பேரவை தலைவர் தனபால், இந்த விவாகரம் நீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்து பேச வேண்டாம். இது முடிந்தபோன விவகாரம் என்றார்.

தொடந்து பேசிய ஸ்டாலின் நீதிமன்ற விவகாரத்தில் நான் நுழையவில்லை. ஒரு அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். என்ன காரணத்துக்காக மாற்றப்பட்டுள்ளார்? என்றார்.

அப்போது, மீண்டும் குறுக்கிட்ட பேரவை தலைவர் தனபால், அதிகாரிகள் மாற்றப்படுவது அர அது நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு அதிகாரியை நியமிப்பதோ, மாற்றம் செய்வதோ அரசின் முடிவு. தினமும் அதிகாரிகள் மாற்றப்படலாம். அதுபற்றி எல்லாம் தினமும் பேசமுடியாது. நீதிமன்றத்தில் உள்ள விவகாரத்தை பேச நான் அனுமதிக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேச ஸ்டாலின் அனுமதி கேட்டார்.இதற்க்கு அனுமதி பேரவை தலைவர் அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் தி.மு.. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here