Home அரசியல் நான் துணை பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றவர் தங்கமணி எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு...

நான் துணை பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றவர் தங்கமணி எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையற்றதுடி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி

10
0
SHARE

சென்னை, ஜன. 11&

சசிகலா சிறைக்கு செல்லும்போது என்னை துணைபொதுச் செயலாளர் ஆக்கவேண்டும் என்று கூறியவர் தங்கமணிதான் என்றும், எம்.எல்..க்கள் சம்பள உயர்வு தேவையற்றது என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஆர்.கே.நகர். சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்யில், மூத்த உறுப்பினர் செம்மலை, பெயரைக்கூட சொல்லாமல் மாயாவிகள் என்று சொன்னார். நாளை (இன்று) வாய்ப்புக்கிடைக்கும் பேசிக்கொள்ளலாம் என்று இருந்தேன். இந்த ஆட்சியை எதிர்த்து வாக்களித்து விட்டு, ஊழல் ஆட்சி என்று சொல்லிவிட்டு, தற்போது நாங்கள் பங்காளிகள் எல்லாம் ஒன்றாகி விட்டோம் என்கிறார்.

இது எல்லாம் மக்களுக்கு தெரியும். சசிகலா சிறைக்கு செல்லும் போது என்னை துணைபொதுச்செயலாளர் ஆக்கவேண்டும் என்று கூறியவரே தங்கமணிதான். அப்பொழுது எனக்காக வாக்கு கேட்டனர். மக்கள் எல்லாவற்றையும் மறத்துவிடுவார்களா?  தர்மயுத்தம் நடத்தியதெல்லாம் எதற்கு இந்த துணைமுதல்வர் பதவிக்கு தான். எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு என்பது தேவையற்றது.

போக்குவரத்து துறையில் நிதியில்லை என்றால் வேறு துறையில் இருந்து நிதியை அங்கு போட முடியாதா? ஆளுநர் உரையில் சொல்கிறார்கள். டெல்டா பகுதிகளில் நீர்நிலைகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ளோம் என்று அங்கு நீர்இல்லாமல் பயிர்கள் எல்லாம். வாடிக்கொண்டிருக்கிறது. ஆட்சி கழிவிந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர். நான் பேசவந்தாலே என்னை பார்க்காத மாதிரியே உள்ளார் சபாநாயர்.

நாளை (இன்று) வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். கிடைத்தால் ஆர்.கே.நகர் பிரச்சனைகுறித்தும் பேசுவேன். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும். தி.. தலைவர் வீரமணியே ஜெயலலிதாவை சமூகநீதிமங்கை என்று கூறியுள்ளார்.

தொட்டில் குழந்தை, அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் எதிர்நோக்கி இருந்த ஒரு தலைவர். எம்.ஜி.ஆரின் சாதனையையும் முறியடித்து 37 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றார்.

அப்பேர்பட்ட தலைவரை ஏதோ வழக்கில் உள்ளார் என்பதற்காக எதிர்கட்சிதலைவர் நினைவு இல்லம் அமைக்கக்கூடாது என்பது உங்களின் தரத்திற்கு அழக என்பதை நினைத்துப்பாருங்கள். இன்னும் எவ்வளவு நாள் ஆட்சியில் இருக்கப்போகிறிர்கள் என்று தெரியவில்லை அதற்குள் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். இவர்கள் நிறைவேற்றாவிட்டாலும் வருங்காலத்தில் ஆட்சியமைத்து ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை நாங்கள் தான் கட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here