Home அரசியல் 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்த பின்பு கட்சியின் பெயர் அறிவிப்புநடிகர் ரஜினிகாந்த் முடிவு

2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்த பின்பு கட்சியின் பெயர் அறிவிப்புநடிகர் ரஜினிகாந்த் முடிவு

10
0
SHARE

சென்னை, ஜன. 11&

உறுப்பினர் சேர்ப்பை முடித்த பிறகே கட்சி பெயரை அறிவிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டு உள்ளார். இதற்காக 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினர்களாக சேர்க்க முயற்சிகள் நடக்கின்றன. இணையதளம் மூலமும் நேரடியாக விண்ணப்ப படிவங்களில் பதிவு செய்தும் 2 வழிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்களுக்கு கட்சி பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், இதுகுறித்த அறிவிப்பு இப்போது இல்லை என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். உறுப்பினர் சேர்க்கையை முடித்த பிறகே கட்சியை அவர் அறிவிக்கும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை முறைப்படுத்தும்படி ரசிகர் மன்றத்துக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டு உள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் தெருவுக்கு தெரு புதிய மன்றங்களை உருவாக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்காக ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களில் 10 லட்சம் பேரையும் குறைவாக உள்ள இடங்களில் மாவட்டங்களில் 5 லட்சம் பேரையும் உறுப்பினர்களாக சேர்க்கும்படி சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக உறுப்பினர் சேர்ப்பு முகாம்கள் தொகுதி வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்கிறார்கள். இணையதளம் மூலமும் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 2 கோடிக்கு மேல் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அரசியல் கட்சி பெயரை ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

அப்போது ரஜினிகாந்த் மக்கள் மன்றம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படும். மேலும் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வருகிற ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. அந்த படம் வெளியானதும் கட்சி பெயரை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here