Home மற்றவை தமிழகத்தில் பள்ளி, கல்லூரிக்கு நாளை விடுமுறை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிக்கு நாளை விடுமுறை

8
0
SHARE

சென்னை, ஜன.11&

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிகாக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழக்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக வரும் 12ந் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து அரசு ஆணையிடுகிறது என தெரிவித்தார்.

அதேபோல் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலத்தில் உள்ள அனைவரும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும், குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அவர்களது இள வயது முதற்கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணி காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களோடு இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டும், தமிழகத்தில் உள்ள உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழங்கங்களுக்கும் மற்றும் பல்கலைக் கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக வரும் 12ந் தேதி விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here