Home மற்றவை போராட்டம் தொடரும்; தொழிற்சங்கம் அறிவிப்பு

போராட்டம் தொடரும்; தொழிற்சங்கம் அறிவிப்பு

12
0
SHARE

சென்னை, ஜன.11&

போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதியில் இருந்து  வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில் தி.மு.. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள்  இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவமாணவிகள்எனஅனைத்துதரப்புமக்களும்

பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பானவழக்குசென்னைஐகோர்ட்டில்

நடந்து வருகிறது. 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி அறிவித்த 750 கோடிரூபாய்

ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், வேலை நிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம் என்று சி..டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது. ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொ.மு.ச வழக்கறிஞர் வாதிட்டார்.

ஊதியஉயர்வுதொடர்பாகபோடப்பட்டஒப்பந்தத்தை

அரசுதிரும்பப்பெற்றால்

பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சி..டி.யு தெரிவித்தது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், 0.13 சதவிகிதகாரணிதான்பிரச்சனையாகஉள்ளது

என்பதை நீதிமன்றம் அறி

கிறது.

இந்த பிரச்சனையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம். ஆனால், பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இன்றே இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து, 2.44 காரணி ஊதியத்தை தற்காலிகமாக ஏற்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. மேலும், 2.57 காரணி ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு சம்மதம் தெரிவித்தால் இன்று முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால், பொதுமக்கள்

நலனில்அரசுக்குஅக்கறை

இல்லாத போது தொழிற்சங்களுக்கு ஏன் என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து, நல்ல முடிவுடன் தொழிலாளர்கள் நாளை (இன்று) பணிக்கு

திரும்புவார்கள் என நம்புவதாக கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து, இன்று  நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here