Home மற்றவை பஸ் தொழிலாளர் சம்பள உயர்வு போராட்டத்திற்கு நடுவேஎம்.எல்.ஏ.க்களுக்கு 100% ஊதிய உயர்வு பேரவையில் மசோதாவை...

பஸ் தொழிலாளர் சம்பள உயர்வு போராட்டத்திற்கு நடுவேஎம்.எல்.ஏ.க்களுக்கு 100% ஊதிய உயர்வு பேரவையில் மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர்  ஓ.பி.எஸ்.

13
0
SHARE

எம்.எல்..க்கள் ஊதிய உயர்வு மசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்..க்கள் ஊதிய உயர்வு மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.

சென்னை, ஜன. 11&

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 8ந் தேதி ஆளுனர் பன்வாரிவால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் வருகிற 12ம் தேதி வரை நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன்படி கூட்டம் நடைபெற்று வருகிறது.

சம்பள உயர்வு மசோதா

நேற்றுநடைபெற்ற

கூட்டத்தில் எம்.எல்.. க்களின்சம்பளம்

குறித்து மசோதா ஒன்றை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில்,  எம்.ஏல்.ஏக்களுக்கு சம்பளம் ரூ.55,000த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்கும்.

அதாவது இருமடங்காக அதிகரிக்கும். அதே போல் எம்.எல்..க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ.2,50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் முன்னாள் எம்.எல்..,க்களின் ஓய்வூதியமும் ரூ.20,000 ஆக அதிகரிக்கும் என்று தெரிவத்தார்.

ஈட்டுப்படி உயர்வு

மேலும், இந்த மசோதாவின்படி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவை துணை தலைவர், எதிர்க்கட்சி தலைவர், அரசு தலைமைக் கொறடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ 20 ஆயிரம் என உயர்த்தப்படும்.

இதேபோல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அவைத்தலைவர், பேரவை துணைத் தலைவர், எதிர்க்கட்சி தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு ஈட்டுப்படி மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ 15 ஆயிரமாகவும்,சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஈட்டுப்படி ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

சில்லரை

செலவினப்படி

முதல்வர், துணை முதல்வர்.அவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு சில்லரை செலவினப்படி ரூ.4 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாகவும், துணைத்தலைவர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு சில்லரை செலவினப்படி 3.500 லிருந்து 7.500 எனவும் உயர்த்தப்படும்.

இதுபோல் தொகுதிப்படி 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக  உயர்த்தப்படும். தொகுப்புப்படி 2,500 லிருந்து 5 ஆயிரம் எனவும், தொலைப்பேசி படி 5 ஆயிரத்திலிருந்து 7.500  ஆயிரமாகவும், ஊர்திப்படி 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

ஜூலை 1ம் தேதி முதல் அமல்

சட்டமன்ற மற்றும் சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை 12 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் என உயர்த்தப்படும். ஜூலை 1ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிமுக நிலையிலேயே தி.மு.. எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்

தக்கது.

தொழிலாளர் நல நிதி சட்ட திருத்த மசோதா

பேரவையில் தாக்கல்

சென்னை, ஜன. 11&

தொழிலாளர் நல நிதி சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவையில்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் 2018ம் ஆண்டு தொழிலாளர் நல நிதி திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில், தமிழ்நாடு தொழிலாளர் நலச் சங்கத்தின் கூறப்பட்ட பொருந்துகையிலிருந்து மாதம் ஒன்றிற்கு 3.500 லிருந்து மிகையாக கூலிகளை ஈட்டிவரும் மேற்பார்வையாளர் இனத்தில் இருக்கும் நபர்களை விலக்கி விடப்பட்டது. கூறப்பட்ட கூலி உச்சவரம்பானது 1997ம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது கூலி வீதங்களானது உயர்ந்துவிட்டது. மேற்பார்வைப் பணியாளர்கள் பலர் கூறப்பட்ட சட்டத்தின் வரம்பு எல்லையிலிருந்து விலக்கப்பட்டனர். தமிழ்நாடு சட்டத்தின்படி வரம்பு எல்லையின் கீழ் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டுவரவும்.மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரம் அளவில் உச்ச வரம்பினை உயர்த்தவும், கூறப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது என்று மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here