Home தமிழகம் ஜி.கே.மூப்பனாரின் 16&ம் ஆண்டு நினைவு நாள் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை...

ஜி.கே.மூப்பனாரின் 16&ம் ஆண்டு நினைவு நாள் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஜி.ஆர்.மூப்பனார் வழங்கினார்

57
0
SHARE

கும்பகோணம், ஆக. 31& ஜி.கே.மூப்பனாரின் 16&ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையட்டிதஞ்சைவடக்குமாவட்டதமிழ்மாநிலகாங்கிரஸ், கும்பகோணம் நகர தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் ரூ2லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.

கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் எதிரிலுள்ள ஜி.கே.மூப்பனார் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார்,தேர்தல் உயர்மட்ட குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எம்.ராஜாங்கம் உள்ளிட்டோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காந்தி சிலையருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மலரால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜி.கே.மூப்பனார் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்இதையடுத்து அதே மேடையில் நலத்திட்ட உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சி தமிழ்மாநிலகாங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜிர்ஜிஸ் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் நகர தலைவர்¢ பி.எஸ்¢.சங்கர் வரவேற்றார்அதில்பெண்ஒருவருக்கு  தையல் இயந்திரமும், ஒருவருக்கு சைக்கிளையும்,300 ஆண்கள், பெண்களுக்கு வேட்டிகள், சேலைகள், பேண்ட் துணிகள் ஆகியவற்றை  ஜி.ஆர்.மூப்பனார் வழங்கினர்.

இந்த நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ2லட்சம் ஆகும். இதில் முன்னாள் எம்.பி. கே.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.கல்யாணசுந்தரம், கே.கே.சுதர்சனன், மாநில செயலாளர் எம்.கே.ஆர்.அசோக்குமார், மாநில இணைச்செயலாளர் யு.சாதிக்அலி,மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆர்.எஸ்¢.ஆர்.சிவா, மாவட்ட பொருளாளர் பி.ரமேஷ், வட்டார தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, கே.செல்வராஜ் மழவராயர், மாவட்ட இளைஞரணி தலைவர் என்.பி.அருண்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முடிவில் நகர துணைத்தலைவர்¢ ஜெய்ஹிந்த்மோகன்  நன்றி கூறினார்.