Home சினிமா வருகிறார் ஆக்ஷன் அருள்

வருகிறார் ஆக்ஷன் அருள்

40
0
SHARE

மலேசியாவில் நடந்த கலைவிழாவில் மிகவும் கவனிக்கூடியதாக அமைந்தது சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் ரஜினி கமலோடு அமர்ந்திருந்துதான்.

அவர் நடிகர் சங்கத்திற்கு இரண்டரை கோடி கொடுத்தது எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இதனால் அவருக்கு மலேசியா நிகழ்ச்சியில் பெரிய மரியாதை கிடைத்தது. அதோடு செய்தியாளர்களும் அவரிடம் போகும் இடம் எல்லாம் கேள்வியை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

அதில் ஒரு நிருபர் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டார். ‘நல்ல திரைக்கதை அமைந்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன்என்று கூறியதால் பக்கத்தில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். மீடியாக்கள் உட்பட.