Home சுடச்சுட 6 மாதத்தில் புதிய காங்கிரஸ்பக்ரைனில் ராகுல் காந்தி பேச்சு

6 மாதத்தில் புதிய காங்கிரஸ்பக்ரைனில் ராகுல் காந்தி பேச்சு

11
0
SHARE

மனாமா, ஜன.10&

6 மாதத்தில் புதிய காங்கிரசை பார்ப்பீர்கள் என்று பக்ரைன் நாட்டில் ராகுல்காந்தி பேசினார்.

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ராகுல்காந்தி தனது கன்னி பயணமாக இஸ்லாமிய நாடான பக்ரைனுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:&

பாரதிய ஜனதா அரசு மக்களிடையே பல்வேறு மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இப்போது பிரச்சினை இல்லை என்ற போதிலும் பின்னாளில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த அரசு வறுமையை போக்குவதற்கு உரிய நடவடிக்கைள் எதையும் எடுக்கவில்லை. நாட்டின் முன்னேற்றம் இந்த ஆட்சியால் தடைபட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் காங்கிரசில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

அமைப்பு ரீதியில் பல்வேறு அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படும். இனி புதிய காங்கிரசாக ஒளிரப் போவதை பார்ப்பீர்கள். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் சிறந்த வளர்ச்சியை பெற்றிருப்பதை காண முடிந்தது.

நாட்டின் நிலைமை மிக மோசமான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்படுகிறது. ஆனால் மத்திய அரசு எதையும் செய்யாமல் மவுனம் காத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here