Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

7
0
SHARE

* இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவின் மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மது போதையில் சில ஒப்பந்தங்கள் குறித்து உளறிக் கொட்டி உள்ளார். இது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* துனிசியா நாட்டில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு வரியை உயர்த்தி அந்நாடு சட்டம் இயற்றியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து நடந்த போராட்டத்தை போலீஸ்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், நீரை பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தினர்.

* புதிய ஜபோன்களை மக்கள் விரும்பி வாங்கும் விதமாக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்து விட்டதாக ஐபோன் நிர்வாகம் சமீபத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருந்தது. இதுகுறித்த விசாரணை பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது.

* மடகாஸ்கர் தீவின் கிழக்கு பகுதியை தாக்கிய புயலில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக, அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* புளூ பெர்ரி பழத்தின் அளவுள்ள சிறிய ரக தக்காளி பழத்தை கண்டறிந்து இஸ்ரேல் சாதனை படைத்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here