Home உலகம் இந்தியர்கள் மகிழ்ச்சி எச்1&பி விசா நீட்டிக்க தடை இல்லைஅமெரிக்கா திடீர் அறிவிப்பு

இந்தியர்கள் மகிழ்ச்சி எச்1&பி விசா நீட்டிக்க தடை இல்லைஅமெரிக்கா திடீர் அறிவிப்பு

9
0
SHARE

வாஷிங்டன், ஜன.10&

எச்1 பி விசா நீட்டிக்க தடை இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

வெளிநாட்டுபணியாளர்களுக்குஅமெரிக்காவழங்கும்எச்.1.பி விசாவை நீட்டிக்க தடை விதிக்கும் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் கைவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை (யூ.எஸ்.சி..எஸ்) நேற்று வெளியிட்டுள்ளது.

இதனால் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் இருந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கவும், பணிபுரியவும் எச்1 பி விசா வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த விசா 3 முதல் 10 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படுகிறது. எச்1 பி விசா வாங்கியவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும், பணிபுரியவும் நிரந்தர அனுமதியான கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஒரு கீரின் கார்டு வழங்க சுமார் பத்தாண்டுகள் ஆகும்

எச்1 பி விசா உள்ள ஒருவர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது அவரது விசாக்காலம் முடிந்தால் அதை நீடிக்கக் கோரி விண்ணப்பம் செய்யலாம்.

அவ்வாறு செய்வோருக்கு விசா கால நீடிப்பு வழங்கப்படுவது உண்டு. இந்த நிலையில் சில நாட்கள் முன்பு கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விசா நீடிப்பை வழங்காமல் ரத்து செய்துவிடலாம் என அமெரிக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக அமெரிக்காவின் செய்தி நிறுவனம் சில நாட்கள் முன்பு செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த நடவடிக்கையால் எச்.1.பி விசாவை வைத்துள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் என்ற காரணத்தால் டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் கைவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை நேற்று வெளியிட்ட செய்தியில் ‘‘எச்1பி விசாவை நீட்டிக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படாது’’ என அறிவித்துள்ளது.

இதனால் தங்கள் வேலை வாய்ப்பை இழந்துவிடுவோம் என அச்சத்தில் இருந்த இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here