Home அரசியல் சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு

2
0
SHARE

சென்னை, ஜன.10

தமிழக பேரவையிலிருந்து  நேற்று ஸ்டாலின் தலைமையில் தி.மு.. எம்.எல்..க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் ஜெஅன்பழகன், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினார். சில பேச்சுகள் அவைகுறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. அன்பழகன் பேச்சு நீக்கப்பட்டது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு..வினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் இது குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுனர் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்  ஜெ.அன்பழகன் உரையாற்றினார். பல்வேறு பிரச்னைகளை எடுத்துரைத்து அவர் உரையாற்றியபோது, பலவிதமான குறுக்கீடுகள் செய்யப்பட்டன. மேலும், அவர் சுட்டிக்காட்டிய பேச்சின் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஆளுனர் உரை மீது அவையில் விவாதம் நடைபெற்ற நிலையில், ஆளுனரை பற்றியே பேசக்கூடாது என்று தெரிவித்தனர். சபாநாயகர்  அவையின் ஒரு சட்டப்பிரிவை சுட்டிக்காட்டினார். அதாவது, குடியரசு தலைவரையோ அல்லது ஆளுனரரையோ தனிப்பட்ட முறையில் விமர்சித்துப் பேசக்கூடாது என்றுதான் விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், ஆளுனர் பற்றியே பேசக்கூடாது என்றார். தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா பற்றி நாங்கள் பேச மாட்டோம், பேசவும் விரும்பவில்லை.ஆனால், அவர் பேசியதை முழுவதுமாக அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கின்றனர்.

இப்படி சர்வாதிகாரத்தன்மையோடு சபாநாயகர் நடந்து கொண்டிருக்கிறார். இதை கண்டிக்கின்ற வகையில் தி.மு..சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.  போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என்று நாங்கள் அவையிலும் வலியுறுத்தினோம்.

ஆனால், துணை முதலமைச்சரே போக்குவரத்துத் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில், தொழிற்சங்கங்கள் வாட்ஸ் அப் மூலம் போராட்டத்தை தூண்டி விட்டதாக, ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை அவையில் முன் வைத்தார் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here