Home மற்றவை அரசின் போர்க்கால நடவடிக்கையால் கன்னியாகுமரி குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதுமு.க.ஸ்டாலின் கேள்விக்கு...

அரசின் போர்க்கால நடவடிக்கையால் கன்னியாகுமரி குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதுமு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்

9
0
SHARE

சென்னை, ஜன. 10&

அரசின் போர்க்கால நடவடிக்கையால் கன்னியாகுமரி மாவட்டம் குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒகி புயல் குறித்து பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஒகி புயல் சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை விரைவாக திரும்ப அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதன் விளைவாக, அம்மாவட்டம் குறுகிய காலத்தில் இயல்பு நிலைமைக்கு திரும்பியது மட்டுமல்லாமல், 3522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 8.1.2018 வரை  அரசால்  நிவாரண உதவிகள் வழங்கியுள்ளதுஒகிபுயலின்போது மீன்பிடிக்க கடலுக்குச் சென்று உயிரிழந்த 14 மீனவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக 2 கோடியே 80 லட்சம் ரூபாய்.

ஒகி புயலினால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளினால் உயிரிழந்த 14 மீனவர் அல்லாத நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக 1 கோடியே 40 லட்சம் ரூபாயும், ஒகி புயலின் போது மரம் விழுந்தது, மின் கம்பங்கள் சாய்ந்தது போன்ற காரணங்களால் காயமடைந்த 20 நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயு வழங்கப்பட்டுள்ளது.

சிறு காயம் அடைந்த 7 நபர்களுக்கு தலா 12 ஆயிரத்து 700 ரூபாயும், 2 நபர்களுக்கு தலா 4 ஆயிரத்து 300 ரூபாயும் நிவாரண உதவியாக 10 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாயும்,30 ஆயிரத்து 778 மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாயாக மொத்தம் 15 கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 1,524 மலைவாழ் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக 76 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும், முழுவதுமாக சேதமடைந்த 1,096 குடிசைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும் பகுதியாக சேதமடைந்த 5,990 குடிசைகளுக்கு தலா 4 ஆயிரத்து 100 ரூபாயும் என நிவாரணமாக மொத்தம் 3 கோடியே 39 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த 63 கைத்தறி மூலப்பொருட்களுக்கும்,  31 உபகரணங்களுக்கும் தலா 4 ஆயிரத்து 100 ரூபாய் நிவாரணமாக மொத்தம் 3 லட்சத்து 85 ஆயிரத்து 400 ரூபாயும்,காணாமல் போன 234 மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும்,ஒகிபுயலின்போது இந்த மாவட்டத்தில் உயிரிழந்த மொத்தம் 7,655 உயிரினங்களுக்கு 24 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒகி புயலின்போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, பிற மாநிலங்களில் கரை ஒதுங்கி தமிழ்நாட்டிற்கு திரும்பி வருவதற்கான உணவுப் பொருள் செலவினமாக 31 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், படகுகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கான எரிபொருள் செலவினமாக 2 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாயும் என மொத்தம் 2 கோடியே 52 லட்சத்து 9 ஆயிரத்து 800 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 கோடியே 38 லட்சத்து 15 ஆயிரத்து 700 ரூபாய் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஒகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வாழை, ரப்பர் மரங்கள் மற்றும் கிராம்பு ஆகிய தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு  முதற்கட்ட கணக்கெடுப்புப் பணி முடிவுற்றதும், வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தேன்.

அதன்படி, வாழை மரங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், எக்டருக்கு 13,500 ரூபாயும், சாதாரண முறை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு 35,000 ரூபாயும், திசு வளர்ப்பு சாகுபடி முறைக்கு எக்டருக்கு 50,000 ரூபாயும் ஆக மொத்தம் பாதிக்கப்பட்ட வாழைப் பயிருக்கு எக்டருக்கு 48,500 முதல் 63,500 ரூபாய் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரப்பர் மரப் பயிருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 18,000 ரூபாயும், மறுசாகுபடி செய்யவும், ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்ய எக்டருக்கு 50,000 ரூபாயும், தேனீ வளர்ப்பு முறையினை ஊக்குவிக்க 32,000 ரூபாயும் ஆக மொத்தம் எக்டருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், கிராம்பு பயிரினைப் பொருத்தவரை, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 18,000 ரூபாயும் மாநில நிதியின் கீழ், 10,000 ரூபாயும் ஆக மொத்தம் ஹெக்«டருக்கு 28,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டு, முதன் தவணையாக, மாநில நிதியிலிருந்து 3 கோடியே 56 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிக்கப்பட்டு 29.12.2017 அன்று ஆணை வழங்கப்பட்டது.

சிறப்புக் குழுக்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் கணக்கெடுப்புப் பணியினை முடிக்க நான் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதன் விளைவாக, தற்போது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான கணக்கெடுப்புப் பணி முழுவதுமாக முடிவுற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,468 ஹெக்டேர் பரப்பில் தோட்டக் கலைப் பயிர்களும், 537 ஹெக்«டர் பரப்பில் வேளாண்மை பயிர்களும் ஆக மொத்தம் 6005 ஹெக்«டர் பரப்பிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 489 எக்டேரிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 131 எக்டேரிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, மாநில பேரிடர் நிவாரண நிதி வரையறையின்படி 33 சதவீதத்திற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட பல்வேறு பயிர்களுக்கு உரிய இடுபொருள் நிவாரணம் கணக்கிடப்பட்டு, இந்த 3 மாவட்டங்களுக்கும் தோட்டக் கலை பயிர்களுக்கு 10 கோடியே 20 லட்சம் ரூபாயும், வேளாண் பயிர்களுக்கு 79 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 10 கோடியே 99 லட்சம் ரூபாய் கணக்கிடப்பட்டு, விரைவில் அதற்கான அரசாணை வெளியிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . ஆகவே,  அரசு துரிதமாக, வேகமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது.

இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here