Home அரசியல் பதில் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டி.டி.வி. தினகரன் வெளிநடப்பு

பதில் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டி.டி.வி. தினகரன் வெளிநடப்பு

34
0
SHARE

சென்னை, ஜன. 10&

அமைச்சரின் பேச்சுக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசும்போது சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட டி.டி.வி. தினகரன் தனக்கு பேச வாய்ப்பு கேட்டார். இதற்கு பேரவை தலைவர் பேச உடனே வாய்ப்பு தர முடியாது.நீங்கள் உட்காருங்கள் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி. தினரகன் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

ஆளுனர் உரையில் எதிர்கட்சி உறுப்பினர் அன்பழகன் உங்களுக்கு 111எம்.எல்.ஏக்கள் தான் உள்ளார்கள் பெரும்பான்மையில்லை என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எழுது பதில்சொல்லும் போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கு உங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்றார். அதற்கு நான் பதில் கூறவேண்டும் என்றேன். அதற்கு அன்பழகன் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் அவருக்கு ஆதரவாக இருக்கும் 18 எம்.எல்..க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.எனக்கு எதிர்கட்சி இருக்கை வழங்கியுள்ளிர்கள். எனவே கேள்விகேட்டால் வாய்ப்பு தரமறுக்கின்றனர். முதல்வர் மற்றும் துணைமுதல்வர் கொடுத்த அறிக்கைக்கும் பதில் கொடுக்கவும் தான் நான் வாய்ப்பு கேட்டேன்.  ஆர்.கே.நகர் தோல்வியை அவர்கள் ஒப்புக்கொள்ளாமல், தி.மு.கவுடன் அவர் கூட்டணி வைத்துவிட்டார் என்று திசைதிருப்புகின்றனர்.

அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல எழுந்தேன். அதற்கு எனக்கு சபாநாயகர் வாய்ப்பு கொடுக்கமறுத்துவிட்டார். எனவே, நான் வெளிநடப்பு செய்துவிட்டேன்.  ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்கிறிர்கள் மானத்தை காப்பாற்றுங்கள் என்று கூறினேன்.  போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. எல்லா நிதியையும் பொதுப்பணித்துறைக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் ஒதுக்கியுள்ளார். பதவியில் வந்தும் அதற்கான பெருந்தன்மை இல்லை. என்பதை மேன்போக்காக கூறினேன். அதையும் தவறாக புரிந்து கொண்டார்கள். இந்த பிரச்சனையை நான் நிச்சயம் சட்டசபையில் எழுப்புவேன். இவ்வாறு தெரிவித்தார்.