Home இந்தியா டாடா வாகனங்களுக்கு 6 ஆண்டுகள் வாரண்டிவர்த்தக பிரிவு தலைவர் பேட்டி

டாடா வாகனங்களுக்கு 6 ஆண்டுகள் வாரண்டிவர்த்தக பிரிவு தலைவர் பேட்டி

6
0
SHARE

சேலம், ஜன.10&

டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு 6 ஆண்டுகள் வாரண்டி அளிப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வணிக வாகன வர்த்தக பிரிவின் தலைவர் கிரிஷ் வாக் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய தொழில்நுட்பம், தயாரிப்புகள் மற்றும் மதிப்பு கூடுதல் சேவைகளில் முன்னணியில் உள்ளது. இந்த 6 ஆண்டுகள் வாரண்டி என்பது இந்த தொழிலில் முதல் முறையாக எங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் முதல் உறுதி. நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களுக்கு இப்புதிய வாரண்டியை அளிப்பதன் மூலம், எங்களது வாகனங்களுக்கு நாங்கள் அளிக்கும் தரம், கடினமான பயன்பாட்டுக்கு உறுதியாகும். இப்புதிய அறிவிப்போடு, வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற வணிகத்தை நீண்ட நாட்களுக்கு வழங்கும் விதமாக 6 ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் வழங்குகிறது. 6 ஆண்டு வாரண்டி மற்றும் 6 ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் வாடிக்கையாளர்களுக்கு மனநிம்மதியை தரும். இதுவே டாடா மோட்டார்ஸ் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கு, 2018ல் நாங்கள் தரும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும் என நம்புகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here