Home சுடச்சுட மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும்உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும்உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

41
0
SHARE

புதுடெல்லி, ஜன. 10&

மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திற்கு பதில் அளித்துள்ளது.

இந்தியாவில் கடுமையான குற்றம் புரிபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சாகும்வரை தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுகின்றனர்.இந்த தண்டனை முறையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டை சேர்ந்த வழக்கறிஞர் மல்கோத்ரா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் மனுவில்ஒரு மனிதர் உயிரிழக்கும் போதும் கவுரமான முறையில் உயிரிழக்க வேண்டும், தூக்கிலிட்டு கொல்லும்போது அவரது கவுரவம் முற்றிலும் அழிந்து போகிறதுஎன கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கில் தூக்கிலிடுவதை தவிர வேறு ஏதேனும் முறையில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை உள்ளதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்மரண தண்டனையை தூக்கிலிடுதல் முறையில் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்றும் விஷ ஊசி மூலம் மரண  தண்டனையை நிறைவேற்ற முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.