Home அரசியல் நீதிமன்ற அனுமதியோடு கச்சராயன் ஏரியை பார்வையிடுகிறேன் மு.க.ஸ்டாலின் பேட்டி

நீதிமன்ற அனுமதியோடு கச்சராயன் ஏரியை பார்வையிடுகிறேன் மு.க.ஸ்டாலின் பேட்டி

26
0
SHARE

சென்னை, ஆக. 31& நீதிமன்ற அனுமதியோடு கச்சராயன் ஏரியை பார்வையிடுகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  மு..ஸ்டாலின்  சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தி.மு..வினரால் ஏற்கனவே தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட எங்களுக்கு அனுமதிவழங்காமல், .தி.மு..வினர் எங்களை தடுத்தார்கள்அதுமட்டுமல்லாமல், நீட்தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்ட நடத்திய நேரத்தில், சேலத்தில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்துசென்றபோது எல்லையிலேயே  தடுத்து நிறுத்தி ஏரியை பார்க்க செல்வதால் தடுக்கிறோம் என்றார்கள்.

சரி, சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ள செல்கிறேன் என்றபோது அதற்கும் அனுமதி இல்லை உங்களை கைது செய்கிறோம் என கைது செய்தார்கள். அதற்குப்பிறகு முறையாக நாங்கள் நீதிமன்றத்தில் அணுகியபோது, முதல்வர் தொகுதியில் இருக்கும்கச்சராயன் ஏரி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எந்த ஏரியை வேண்டுமானாலும் பார்வையிடலாம் என உத்தரவு வந்தது. ஆகையால் (இன்று) சேலம்,ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நான் செல்கிறேன். அப்போது எடப்பாடி தொகுதியில் இருக்கும் கச்சராயன் ஏரியையும் பார்வையிட இருக்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்.